Take a fresh look at your lifestyle.

இந்திய சினிமா ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் ‘புஷ்பா-2: தி ரூல்’ படத்தின் பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நவம்பர் 17 அன்று பாட்னாவில் நடக்கிறது

30

’புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் பேசிய ‘புஷ்பான்னா பூ நினைச்சியா, நெருப்புடா’ என்ற வசனம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியிருக்கிறது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடித்த ’புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படம் தெலுங்கு சினிமாவை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றது. இதன் அடுத்த பாகம் ‘புஷ்பா2: தி ரூல்’ பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் வேட்டை நடத்த டிசம்பர் 5, 2024 அன்று வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர், சுகுமார் ரைட்டிங்ஸ் உடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். படத்திற்கான புரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பாட்னா, கொல்கத்தா, சென்னை, கொச்சி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் புரோமோஷனல் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பாட்னாவில் நவம்பர் 17 ஆம் தேதி பிரமாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்வை அறிவிப்பதற்காக அல்லு அர்ஜுன் துப்பாக்கியை கையில் வைத்திருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ’புஷ்பா-2: தி ரூல்’ பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.