Take a fresh look at your lifestyle.

அமரன் திரைவிமர்சனம்

28

மேஜர் முகுந்தன் அவருடைய வாழ்க்கை படமாக அமைந்திருக்கிறது இந்த அமரன் அனைவருக்கும் தெரிந்த கதை இது எப்படி படம் பார்க்க போகிறார்கள் என்பதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது…

சிறப்பான திறக்கதை.. விறுவிறுப்பான நம்மை கட்டிப்போட்டு… வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர்..

உண்மையான அந்த கதை …பார்த்ததற்கு உயிர் கொடுத்திருக்கிறது
சிவகார்த்திகேயன்…

சிவகார்த்திகேயனா சாய் பல்லவியா என்று இருவருக்கும் போட்டி வைத்தால் கண்டிப்பாக வெற்றி பெறப்போவது சாய் பல்லவி தான்… தேசிய விருதுகளால் அழகு படுத்துவதே அவருக்கு கிடைக்கும் மரியாதையாக தோன்றுகிறது..

சென்னை  தாம்பரத்தில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து காஞ்சிபுரத்தில் பள்ளிப் படிப்பையும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் டிப்ளமோ இன் ஜர்னலிசமும் படித்து , சென்னை பழவந்தாங்கல் ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமியில் ராணுவப்,பயிற்சி பெற்று, 22ஆவது பட்டாலியன்  ராஜ்புத் ரெஜிமெண்ட்டில்  லெஃப்டினன்ட் ஆகி, வெகு விரைவில் கேப்டனாக முன்கூட்டியே பதவி உயர்வு பெற்று,
தனது கல்லூரிக் கால தோழியும் காதலியுமான மலையாளப் பெண் இந்து ரெபேக்கா வர்கீசை மணந்து , ஒரு மகளுக்குத் தந்தையாகி லெபனானில் யுனைடட் நேஷன்ஸ் மிஷனில் பணியாற்றி,  , மேஜராகப் பதவி உயர்வு பெற்று, 44 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவில்  காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டு, ஒரு முக்கியத் தீவிரவாதியை சுட்டுக் கொன்று,
காஷ்மீர் மக்களிடையே கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தி,இன்னொரு தீவிரவாதியை பிடிக்கும்போது சுடப்பட்டு,  வீர மரணம் அடைந்த …. முக்கியமாக இவற்றை எல்லாம் முப்பத்தி ஒரு வயதுக்குள் செய்த ,
மேஜர் முகுந்த் வரதராஜன்- தி கிரேட்,   அவர்களின் வாழ்க்கையைப் பற்றி, பத்திரிக்கையாளர் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய  India’s Most Fearless: True Stories of Modern Military Heroes என்ற நூலின் அடிப்படையில்,  எடுக்கப்பட்டிருக்கும் அற்புதமான படம்.
கண்டிப்பாக அமரன் படம் முகுந்த் வரதராஜனுக்கு சிறந்த சமர்ப்பணமாக அமையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்திய ராணுவத்திற்காக உயிர்நீத்த முகுந்த் வரதராஜன் போல் இன்னும் ஏராளமானோர் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களுடைய கதையும் மக்களுக்கு படங்கள் மூலம் தெரிய வந்தால், அது அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.
இயக்கம் – ராஜ்குமார் பெரியசாமி
நடிகர்கள் – சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – ராஜ் கமல் ஃபிலிம்ஸ் – கமலஹாசன்.