ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் ஆர் மகேந்திரன் இணைந்து பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் படம் அமரன். இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
“சோனி பிக்சர்ஸ்ஸிடமிருந்து அமரன் படம் இயக்குவது பற்றிய எனக்கு வாய்ப்பு வந்தது இது பற்றி உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து படத்தை வழங்குவதற்காக கேட்டோம். அவர் அமரன் படத்தின் கதையை கேட்டுவிட்டு மிகவும் பிடித்துப் போக நானும் இப்படத்தில் தயாரிப்பு பார்ட்னராக இணைவதாக கூறி இணைந்தார். அன்று முதல் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.