மலை பிரதேசமான பூம்பாறை கிராமத்தில் விவேக் பிரசன்னா மற்றும் அருவி மதன் குடும்பத்துடன் விவசாயம் செய்து பிழைத்து வருகினறனர் .
சொத்து பிரச்சனையில் உடன் பிறந்த சகோதரர்களின் சூழ்ச்சியால் அருவி மதனின் குடும்பம் லாரி விபத்தில் சிக்கி கொள்ள ,,,, அதில் தனது குடும்பத்தை இழந்த நாயகன் வெற்றி மனப்போராட்டத்தில் இருந்து அமைதி ஏற்பட காசிக்கு சென்று ஹரிஷ் பெராடி தலைமையில் அங்கிருக்கும் மடத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் மூழ்க நினைக்கிறார்.
இந்நிலையில் மிக பெரிய எழுத்தாளர் ஆக வேண்டும் என்று விரும்பும் வெற்றி துறவியாக பல வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீக சிந்தனை அவருக்குள் வர மறுக்கிறது .
இதை கவனிக்கும் ஹரிஷ் பெராடியின் ஆலோசனைப்படி தான் நேசிக்கும் எழுத்துலகை நோக்கிய தனது பயணத்தில் தமிழ் பேசும் வெளி நாட்டு ஜெர்மன் பெண்ணான மதுராவின் நட்பு கிடைக்க ,அதன் மூலம் துறவியாக சுற்றி திரிந்தவர் சக மனிதராக மாறி, தன் மனம் விரும்பும் எழுத்துலகில் இணைய முற்படும் போது இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறி வெற்றியும் -மதுராவும் காதலிக்கும் நேரத்தில் மதுரா தன் சொந்த வேலையாக பாண்டிச்சேரி செல்கிறார் .
பாண்டிச்சேரியில் ஒரு ரவுடி கும்பலின் பாலியல் தொல்லையால் மதுரா துரதிஷ்ட வசமாக உயிரிழக்க ,,, காதல் முதல் அனைத்தையும் இழந்த வெற்றி மீண்டும் துறவியாகி எழுத்தாளனாக மதுராவின் பெயரில் ஒரு புத்தகத்தை எழுத ,, அந்த புத்தகம் வாசகர் வட்டாரத்தில் மிக பெரிய வெற்றியடைந்து அவர் நினைத்தது போலவே எழுத்துலகில் பிரபலமான மனிதராக உருமாறுகிறார்.
உத்தரகாண்ட்டில் துறவியாக வாழ்ந்து வந்த வெற்றி தான் எழுதிய புத்தகத்தை பார்ப்பதற்காக சென்னை நூலகம் ஒன்றில் வரும்போது அங்கு தனக்கு நெருங்கிய உறவு கொண்ட நூலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணை வெற்றி சந்திக்கிறார் .
முடிவில் வெற்றி சந்தித்த அந்த பெண் யார் ? அந்த பெண்ணால் வெற்றியின் வாழ்க்கை மீண்டும் சந்தோசமாக மாறியதா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ஆலன் ‘
கதையின் நாயகனாக வெற்றி தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை நேசிக்கும் ஜெர்மனி நாட்டு பெண்ணின் மீது காதல் வயப்படும்போதும் ,,,, ஆன்மிக துறவியாக நடிப்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் இயல்பாக நடித்திருக்கிறார் .
ஜெர்மனி நாட்டு பெண்ணாக மதுராவும் ,, மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனுசித்தாராவும் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக அனு சித்தாரா அமைதியாக அழகில் ஜொலிக்கிறார்
விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவும் ,
மனோஜ் கிருஷ்ணாவின் இசையும் படத்திற்கு பக்க பலம்
காதல், ஆன்மீகம் எழுத்துலகம் என மூன்றும் சேர்ந்த கதையுடன் ,,, காட்சிகளில் வேக தடை இருந்தாலும் திரைக்கதையின் நேர்த்தியினால் காதல் பின்னணி கலந்த ஆன்மிக படமாக ரசிக்கும்படி இயக்கியுள்ளார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் சிவா.ஆர்.