Take a fresh look at your lifestyle.

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து டெரிஃபிக் வில்லன் ஆரவ்வின் மைக்கேல் கதாபாத்திரத்தை இயக்குநர் மகிழ் திருமேனி அறிமுகப்படுத்தியுள்ளார்!

16

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 9) நடிகர் ஆரவ்வின் கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் அவரது பாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்ற ஆர்வத்தினை உருவாக்கியுள்ளது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படங்களில் பொதுவாக அனைத்து நடிகர்களுக்கும் குறிப்பாக வில்லன்களுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்திருக்க, படக்குழுவினர் மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இந்த படத்தில் ஆரவ் கதாபாத்திரம் நல்லவரா கெட்டவரா என்பது பற்றி இயக்குநர் மகிழ் திருமேனி கூறியிருப்பதாவது, “பல கதைகளுடனும் திருப்பங்களுடனும் வரும் வில்லன் மைக்கேல் நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்வான். ‘மைக்கேல்’ கதாபாத்திரத்தை நான் உருவாக்கி முடித்ததும், இந்தியத் துறையில் பல பெரிய நடிகர்களின் பெயர்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. ஆனால், ஆரவ்வின் திறமை பக்கம் என் மனம் சாய்ந்தது. ‘கலகத்தலைவன்’ படத்தின் போதே அவரது அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன். அந்த விஷயம்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்ய வைத்தது. ஆரவ்வின் பெயரை அஜித் சாரிடம் நான் சொன்னபோது, இயக்குநரின் தேர்வில் தலையிடுவதில்லை என்று சொல்லி மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். என்னுடைய சாய்ஸ் சரியானது என்று ஆரவ்வும் நிரூபித்து இருக்கிறார். சில ஷெட்யூல் முடித்த பிறகு அஜித் சாரும் ஆரவ் மீது தன் திருப்தியை வெளிப்படுத்தினார்” என்றார்.

‘விடாமுயற்சி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்துள்ளது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். மற்ற நட்சத்திர நடிகர்கள் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில், ரவி ராகவேந்திரா, சஞ்சய், தஸ்ரதி, ரம்யா, காசிம், ஜவன்ஷிர், ரஷாத் சஃபராலியேவ், விதாதி ஹசனோவ், துரல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் டிவி சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது மற்றும் நெட்ஃபிலிக்ஸ் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப குழு:

இயக்குநர் – மகிழ் திருமேனி,
இசை – அனிருத்,
ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்,
எடிட்டர் – என்.பி.ஸ்ரீகாந்த்,
கலை இயக்குநர் – மிலன்,
ஸ்டண்ட் மாஸ்டர் – சுப்ரீம் சுந்தர்,
ஆடை வடிவமைப்பாளர் – அனு வர்தன்,
நிர்வாகத் தயாரிப்பாளர் -சுப்ரமணியன் நாராயணன்,
தயாரிப்பு நிர்வாகி – ஜே கிரிநாதன் / ஜே ஜெயசீலன்,
ஸ்டில்ஸ் – ஜி. ஆனந்த் குமார்,
விளம்பர வடிவமைப்பாளர் – கோபி பிரசன்னா,
விஎஃப்எக்ஸ்- ஹரிஹரசுதன்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா,
ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் – ஜிகேஎம் தமிழ் குமரன்,
தயாரிப்பாளர் – சுபாஸ்கரன்