Take a fresh look at your lifestyle.

லண்டனில் புகழ்மிகு OVO Arena Wembley இல், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் கடைசி உலகப்போர் ஃபர்ஸ்ட் லுக் !!

18

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”.  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வீடியோ, லண்டனில் புகழ்மிகு OVO Arena Wembley இல், ஹிப் ஹாப் தமிழா இசைக் கச்சேரியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

OVO Arena Wembley இல், ஒரு தமிழ்ப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

ராப் பாடகராக அறிமுகாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

மீசைய முறுக்கு, சிவக்குமாரின் சபதம் படங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார்ஹிப் ஹாப் ஆதி. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் முகத்துக்குப் பின் பீரங்கி, விமானம், சிதிலமடைந்த போர்க்களம் என படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, அமைந்துள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் போரின் பின்னணியில், மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசும் படைப்பாக இப்படம் இருக்குமெனத் தெரிகிறது. மிக வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில்  நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா ஷரா RA,FJ,குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின்  இசை வெளியீடு  மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: ஹிப் ஹாப் ஆதி
தயாரிப்பாளர்: ஹிப் ஹாப் ஆதி
ஒளிப்பதிவு : அர்ஜுன்ராஜா
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் ஆதி
எடிட்டர்: பிரதீப் E ராகவ்
கலை இயக்குநர் : R.K நாகு
சண்டை பயிற்சி : மகேஷ் மேத்யூ
பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா, விக்னேஷ் ஸ்ரீகாந்த், FOTTY SEVEN, சிவவாக்கியார்
ஒலி வடிவமைப்பாளர் : ராகவ் ரமேஷ், ஹரி பிரசாத் M A
VFX : 85FX
ஆடை வடிவமைப்பாளர் : கீர்த்தி வாசன்
தயாரிப்பு மேற்பார்வை : C. ஹரி வெங்கட்
நிர்வாக மேலாளர் : T.N. கோகுல்நாத், S. பார்த்திபன்
நிர்வாக தயாரிப்பாளர் : வாசுதேவன்
மக்கள் தொடர் : சதீஷ் குமார்.