திரையுலகில் சரவணன் என்று அறியப்படுகிற சக்தி சரவணன் ஆகிய நான் இன்று வளர்ந்துவரும் மக்கள் தொடர்பாளர் .
முன்னணி மக்கள் தொடர்பாளரான *ஜான்சன்* சார் அவர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்து இத்தொழிலின் நுணுக்கங்களைக் கற்றேன்.
உதவி மக்கள் தொடர்பாளராக இருந்த நான்கு ஆண்டுகளில் நான் கற்றவை ஏராளம். கும்கி ,அட்டகத்தி ,மாற்றான் , தாண்டவம் , பிரியாணி, பாண்டிய நாடு , கோலி சோடா , கேடி பில்லா கில்லாடி ரங்கா , நான் சிகப்பு மனிதன், அஞ்சான் போன்று சுமார் 60 படங்களில் பணியாற்றியிருக்கிறேன்.
நான்கு ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய பின் தென்னிந்தியத் திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தில் உறுப்பினரானேன்.பிறகு தனியே இயங்க ஆரம்பித்தேன்.
என் வழி தனி வழி என்று எனக்கான சிறிய பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்.மிதமான வேகம் பாதுகாப்பான பயணம் என்று என் பணி தொடர்கிறது.
மனிதர்களால் ஆனது தான் இந்த வாழ்க்கை.
எனது பணியில் மனிதர்களின் நட்புறவும் நல்லிணக்கமும் தேவை என்பதை நான் என்றும் மறவேன்.
எனது இந்த மக்கள் தொடர்பாளர் பணியில் என் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக இருந்து ஆதரவளித்த,ஆதரவளித்து வரும் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், youtube நண்பர்கள், சோசியல் மீடியா நண்பர்கள், என்னுடைய மக்கள் தொடர்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ,விநியோகஸ்தர்கள், திரைப்படத் தயாரிப்பு நிர்வாகிகள்,நட்சத்திரங்களின் மேலாளர்கள், என்னுடைய உதவியாளர்கள், எனது நண்பர்கள்,என்றும் எனது நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் உங்களது அன்பையும் ஆதரவையும் விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் !
என்றும் நன்றி கடந்த அன்புடன் ,
சக்தி சரவணன்,மக்கள் தொடர்பாளர்
இதுவரை நான் பணியாற்றிய ரிலீஸ் ஆன படங்களின் பட்டியல் இதோ
1.விரைவில் இசை 2.மீராஜாக்கிரதை
3. வென்று வருவான்
4. இலை
5. புயலா கிளம்பி வரோம். 6.திட்டிவாசல்
7.ஔடதம்,
8.இமை
9.கொஞ்சம் கொஞ்சம்,
10.ழகரம்
11.டிராபிக் ராமசாமி 12.வன்முறை
13.டார்ச் லைட்
14.சூப்பர் டூப்பர்,
15.உன்னால் என்னால்
16.கட்சிக்காரன்
17.பென் விலை வெறும் 999 18.வேட்டை நாய்,
19.சிண்ரெல்லா,
20.AGP,
21.மட்டி,
22.இறுதி பக்கம்
23.துணிகரம்,
24.கண்டதைப் படிக்காதே,
25.D3
26.போலாமா ஊர் கோலம் 27.செஞ்சி
28.விழித்தெழு,
29.டேக் டைவர்ஷன்
30.கிராண்மா
31.ரீ
32.நான்கு நண்பர்களும் தலைக்கவசமும்
33.அடங்காமை
34.கபளிஹரம்
35.தமிழனானேன்
36.அவள் அப்படித்தான் 2
37.ஐமா
38.கிருஷ்ணன்
39.துருவங்கள் பதினாறு (Line producer )
40.குருமூர்த்தி,
41.2323
42.4554,
43.கும்பாரி
44.நான் கடவுள் இல்லை
45.ரா ரா சரசுக்கு ராரா
46.அகோரி
47.லாக்கர்
48.ஆத்மிகா
49.ஆந்தை
50. ஆலகாலம்
51.Kanni
52.BujiiatAnupatti