25 ஆண்டு கால வாழ்க்கையில் 96 கொலைகளை செய்து ஜெயிலில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி ஜெ டி ஜெகதீஷ் யின் வாழ்க்கையை பிரபல சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கபிலன் புத்தமாக எழுதுவதற்காக ஜெயிலில் அவரை சந்திக்கிறார்.
இந்நிலையில் அவனின் தொடர் கொலைகளை கேள்விப்பட்டு அவனைப் பற்றி புத்தகமாக எழுதி வெளியிட ஆசைப்படுகிறார்.
வாலிப வயதில் ஜெ டி ஜெகதீஷ் தவறு செய்யாத போது தன்னை தாக்கியவரை கொலை செய்ய ஆரம்பிக்க, அதனை பார்க்கும் மாறன் ஜெகதீஷை தன் அடியாளாக வைத்துக் கொள்கிறார்.
வளர்ப்பு தந்தையாக பாவித்து அவருடன் பயணிக்கும் ஜெகதீஷ் மாறனுக்காக தன் குடும்பத்தை பிரிந்து தன் நண்பர்களை, விசுவாசமானவர்களை, எதிரிகளை தன் 25 ஆண்டு கால வாழ்க்கையில் 96 கொலைகள் செய்து சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் ஜெகதீஷ் கொடூரமான கொலைக் குற்றவாளி.
இந்நிலையில் எழுத்தாளர் கபிலன் ஜெயிலில் இருக்கும் ஜெகதீஷை கண்டு பேட்டி எடுக்கிறார்.
அவரது கேள்விகளுக்கான பதில்களை ஜெகதீஷ் கதையாக சொல்ல க்ரைம் திரில்லர் நிறைந்த காட்சிகளாக விவரிக்கும் படம்தான் ‘பயமறியா பிரம்மை’
கதையின் நாயகனாக ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் ஜெ டி, மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் எழுத்தாளர் கபிலனாக நடித்திருக்கும் வினோத் சாகர், ஜெகதீஷின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா கணேஷ்,,,,, இவர்களுடன் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேரும் ஜெகதீஷ் கதாபாத்திரமாக வாழ்க்கையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நடந்த சம்பவங்களை திரையில் மிக இயல்பாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
பிரவின் மற்றும் நந்தாவின் ஒளிப்பதிவும், கே -வின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் .
கொலையை கலையாக ஒருவனது வாழ்க்கையை எழுதி இயக்கியிருக்கும் ராகுல் கபாலி க்ரைம் திரில்லர் பட ரசிகர்களை மட்டும் மனதில் வைத்து இயக்கியுள்ளார் .
ரசிக்கும்படி வித்தியாசமான முறையில் கதை இருந்தாலும் முகம் சுளிக்க வைக்கும் ரத்த கோலங்களை கொஞ்சம் தவிர்த்து திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.