Take a fresh look at your lifestyle.

சினிமா விமர்சனம் – ‘பி.டி.சார்’

133

பி.டி.மாஸ்டராக கலக்கும் ஹிப்ஹாப் ஆதி

பள்ளியில் பி.டி.மாஸ்டராக இருக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம் முடியும் வரை கண்டம் இருப்பதாக ஜோசியர் கூற எந்தவித பிரச்சினைகளிலும் தன் மகன் சிக்கிவிடாதபடஹீரோ ஆதி.

ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். அந்தப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் வானதியை (காஷ்மீரா) காதலிக்கிறார். ஆரம்பத்தில் ஒருதலையான காதல், நாயகனின் ‘விடா’முயற்சியால் டபுள் சைடாகிறது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்துக்கான பணிகள் தொடங்க, இடையில் நிகழும் நிகழும் பிரச்சினையால் அமைதியான ஆதி வெகுண்டெழ வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டு, நீதிக்கான போராட்டத்தில் இறங்குகிறார். அது என்ன போராட்டம்? அதில் வெற்றி கிடைத்ததா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

‘கிளப்புல மப்புல திரியிற பொம்பள’ என்ற ஆல்பம் பாடலில் கவனம் பெற்ற ஆதி, அங்கிருந்து பல மைல்கள் நகர்ந்து பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களை பேசத் துணிந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. அதிலும் பெண்களின் ஆடை, அவர்கள் மீதான அத்துமீறல்களுக்கு காரணமில்லை என்ற இடம் கவனிக்க வைக்கிறது.

கொங்கு ஸ்லாங், மேஜிக் வால் ஐடியா, ‘இது ஆக்‌ஷன் மேடம்’ என்ற வைரல் நிகழ்ச்சியை நுழைத்தது, மாணவர்களுடன் ஆதி செய்யும் கலாட்டா, தந்தையின் அட்டகாசம், கூடவே ஹீரோயிசம், பாடல், காதல், சண்டை என்ற கமர்ஷியல் எல்லைக்குள் அழுத்தமான கருவை நுழைத்து பேசியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்.

மேற்கண்ட அம்சங்கள் படத்தை எங்கேஜிங்காக கொண்டு செல்ல முயல்வதுடன் ஓரளவு ரசிக்க வைக்கின்றன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், பெற்றோராலும், சமூகத்தாலும் தனித்துவிடப்படுகிறாள் என்பதை காட்ட முயற்சித்திருப்பது நன்று. “எங்களோட ட்ரெஸ்ஸ வாங்கி பாருங்க, அதுல எத்தன ஆண்களோட கைரேகை இருக்கும்னு தெரியும்” போன்ற வசனங்களும், பாதிக்கப்பட்ட பெண்ணை வசைபாடி, மன அழுத்தத்தை கூட்டும் இன்றைய சோஷியல் மீடியா உலகு குறித்தும், ‘ஊடக’ பசி குறித்தும் பேசியது ஓகே தான்.

ஹிப்ஹாப் ஆதியின் தாயாக தேவதர்ஷினி கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். மைக் டைசன் ரசிகராக வரும் ராஜா ஒரு சில காட்சிகளில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இளவரசுவின் அனுபவம் யதார்த்தம் பேச, அதே பெண்ணின் தாயாக நடித்துள்ள வினோதியின் நடிப்பில் செயற்கைத்தனம் மேலோங்கி காணப்படுகிறது. கத்துவது, அலறுவது மட்டுமே நடிப்பில்லை மேடம்! சிறப்புத் தோற்றத்தில் கே.பாக்யராஜ் சில ஒன்லைனர்களை போட்டுச் சிரிக்க வைக்க, வழக்குரைஞராக வரும் மதுவந்தி அந்தக் கதாபாத்திரத்துக்குச் சரியான தேர்வாக அமைகிறார்.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் இனிமை. பாலியல் கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் கவுரவம் கருதி அப்படியே விட்டுவிடாமல் குற்றவாளியை சட்டத்துக்கு முன்