எலக்சன் (பட விமர்சனம்)
- படம்: எலக்சன்
நடிப்பு: விஜயகுமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ்மரியன் பவல் நவநீதன், திலீபன், நாச்சியார் சுகந்தி, ராஜிவ் ஆனந்த், குலோத்துங்கன்
தயாரிப்பு: ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா
இசை : கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜ்
இயக்கம்: தமிழ்
பிஆர்ஓ: யுவராஜ்
நல்லூர் பகுதி பஞ்சாயத்தில் வசிக்கும் ஜார்ஜ் மரியன் ஒரு கட்சிக்கு தீவிர தொண்டராக இருக்கிறார். அவரது மகன் விஜயகுமார். கட்சியில் தொண்டராகவே இருக்கும் ஜார்ஜி க்கு ஊர் மக்களிடம் நல்ல பெயர் கட்சியிலும் தீவிர தொண்டர் என்ற பெயர் உள்ளது. ஆனால் அவரை கடைசி வரை கட்சி தொண்டன ராகவே பார்க்கிறது. கட்சியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் ஜார்ஜுக்கு சீட் வழங்க மறுக்கப்படுகிறது. இதை மனைவியிடம் சொல்லி வருத்தப்படுகிறார் ஜார்ஜ். இதற்கிடையில் ஊரில் வழக்கமாக தலைவர் பதவிக்கு வரும் ஜாதி. வெறி குடும்பம் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தலைவர் பதவியை பிடிக்க முடிவு செய்கின்றனர். தன் மகனை தேர்தலில் போட்டியிட வைக்கி றார். அரசியலில் தீவிரமாக உழைத்தும் தன் தந்தைக்கு மரியாதை இல்லை என்பதை கண்டு வருத்தம் அடையும் விஜயகுமார் தனது மாமா கூறியது போல் தேர்தலில் நிற்க முடிவு செய்கிறார். உள்ளாட்சி தேர்தலில். இதனால் ஓட்டுக்கள் சிதறும் நிலை ஏற்படுகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சாதி வெறியரும், விஜயகுமாரும் தோற்கும் நிலை ஏற்படுகிறது. இதில் கோபம் அடைந்த ஜாதி சார்ந்த தலைவர் கூட்டம் ஊரில் கலவரத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள், தேர்தலில் போட்டியிட்டு தோற்ற விஜயகுமார் மீண்டும் தேர்தலில் போட்டியிடு கிறார், அவரால் ஜெயிக்க முடிந்ததா? உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் அரசியல் என்ன ? என்பதை பட்டவர்தனமாக எடுத்துக் கூறுகிறது எலக்சன் படம்.
உறியடி விஜயகுமார் வளர்ந்து வரும் ஹீரோ என்பதை மனதில் நிறுத்தி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து வருவது அவரை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது அந்த வகையில் எலக்சன் படமும் அவருக்கு மற்றொரு படிக்கல்லாக அமைந்திருக்கிறது என்று நான் சொல்ல வேண்டும்.
தேர்தல், வேட்பாளர் என்று சிந்தனையே இல்லாமல் எதார்த்தமான நடுத்தர குடும்பத்தை சேர்ந்த விஜய குமாரை தேர்தலில் நிற்கச் சொல்லி தனது மாமா பவன் நவநீதன் கூறும்போது, “இதெல்லாம் எதுக்கு மாமா என்னை எலலாம் ஏத்துப்பாங் களா” என்று சொல்வதும் ஒரு கட்டத்தில் தன் தந்தைக்கு கட்சியில் மரியாதை இல்லை என்று தெரிய வந்ததும் தேர்தலில் நின்று ஜெயித்து காட்ட வேண்டும் என்று முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்ய விஜயகுமார் புறப்படுவதும் திருப்பமான காட்சிகள்.
மனுதாக்கலுக்கு புறப்படும் போது ஒலிக்கும் அந்த பாடல் நாகூர் அனிபா குரலை நினைவுபடுத் துகிறது. .
ஹீரோ என்பதை காட்டிக் கொள்ளாமல் எதார்த்த இளைஞனாக விஜயகுமார் நடித்திருப்பது அவரது கேரக்டரை மெருகேற்றுகிறது. அதேசமயம் அவரின் அந்த சிரிப்பும் கூட்டத் துக்கு மத்தியில் இருந்தாலும் கவனத்தை ஈர்க்கும் முகமும் அவரை ஹீரோவாக அடையாள காட்ட தவறவில்லை.
ஜார்ஜ் மரியன் நிஜ அரசியல் தொண்டனாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
விஜயகுமாரை காதலிக்கும் ரிச்சா பின்னர் ஏற்படும் அரசியல் குழப்பத்தில் விஜயகுமாரை திருமணம் செய்ய மறுப்பது காதல் கொலை.
பள்ளியில் டீச்சர் ஆக பணிபுரியும் ப்ரீத்தி, விஜயகுமாருக்கு மனைவியாக வந்து வலுவான நடிப்பை வழங்கி இருக்கிறார். திலீபன் வில்லத்தனம் காட்டுகிறார்.
தேர்தல் என்பது பதவியை காப்பாற்றிக் கொள்ள பணத்தை காப்பாற்றிக்கொள்ள அல்லது கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள சில அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தேர்தல் என்பது மக்களுக்கு சேவையாற்ற கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு என்பதை ஆணித்தரமாக இப்படத்தில் இயக்குனர் தமிழ் சொல்லி இருப்பது பலரின் முகத்திரையை கிழிக்கிறது.
படம் திராவிட அரசியலை பேசுகிறது. திராவிட அரசு வந்த பிறகு மக்களிடம் ஏற்பட்ட வளர்ச்சியை தொடக்க காட்சியிலேயே இயக்குனர் பதிவு செய்திருப்பது தவறாமல் பார்க்க வேண்டிய காட்சிகள். ஒரு கட்டத்தில் விஜயகுமாரை அவரது தந்தை ஜார்ஜ், திராவிட சிசு என்று கூறும்போது புல்லரிக்கிறது
ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவும் கோவிந்த் வசந்தாவின் இசையும் எந்த இடத்திலும் சினிமா பார்க்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தாமல் காட்சிகளோடு ஒன்ற வைத்திருப்பது பிளஸ் .
அழகிய பெரியவன், விஜயகுமார், தமிழ் மூவரும் இணைந்து எழுதி இருக்கும் வசனங்கள் முத்து முத்தானவை. அரசியல் ஒரு சாக்கடை அது நமக்கு வேண்டாம் என்று பலர் ஒதுங்கி செல்வதை சமுதாயத்தில் பார்க்க முடிகிறது அப்படிப்பட்டவர்களும் இந்த படத்தை பார்த்து இன்று முதல் அரசியல் பேச தொடங்குவது நாட்டில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் படத்தை வெளியிடுகிறார்
எலக்சன் – அரசியல் கற்றுத்தரும் அகராதி.