Take a fresh look at your lifestyle.

அரண்மனை 4 திரைவிமர்சனம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியா இந்த அரண்மனை 4…

160

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியா இந்த அரண்மனை 4…

தங்கையின் மரணத்தில் சந்தேகும் கொள்ளும் அண்ணன், கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பதே இந்த அரண்மனை 4.

சென்னையில் வக்கீலாக இருக்கும் சரவணனுக்கு (சுந்தர் சி) அவரின் தங்கை செல்வி (தமன்னா) இறந்துவிட்டார் என்கிற தகவல் கிடைக்கிறது. பாழடைந்த அரண்மனையில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த செல்விக்கு என்ன நேர்ந்திருக்கும் அறிந்துகொள்ள உறவினர் கோவை சரளாவுடன் கிராமத்துக்கு வருகிறார் சுந்தர் சி. அந்த பங்களாவில் செட் பிராப்பர்ட்டியாக விடிவி கணேஷும், யோகி பாபுவும் இருக்கிறார்கள். அந்த அரண்மனையின் சொந்தக்காரர் டெல்லி கணேஷ். அவரின் பேத்தி ராஷி கண்ணா. அந்த அரண்மனையின் இன்னொரு செட் பிராப்பர்ட்டி சேசு. கேமியோ செட் பிராப்பர்ட்டியாக மொட்டை ராஜேந்திரன். இவர்கள் தான் பிரதான கதாபாத்திரங்கள். அந்த ஊரில் இருப்பது என்ன மாதிரியான பேய். அந்த பேயின் பூர்விகம் என்ன. தங்கை, தங்கை கணவர் மரணத்துக்கு யார் காரணம். ஏன் இந்தக் கொலைகள். அந்த பேய்க்கு கிடைக்கவிருக்கும் சக்திகள் என்ன என்ன இதெல்லாம் தான் அரண்மனை 4 படத்தின் கதை.