நடிகர் பிரபுதேவா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் – மிகவும் எதிர்பார்க்கப்படும் #ARRPD6 படப்பிடிப்பு இன்று துவங்கியது

எங்கள் திரைப்படமான #arrpd6 அறிவிப்புக்கு அற்புதமான ஆதரவை வழங்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும், ஆதரவும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படத்திற்கான முன்னோட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்து முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். இதில் நடிகர்கள் பிரபு தேவா, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் AR ரஹ்மானின் கலக்கலான பாடல்கள் இசையமைக்கப் பட்டு வருகின்றன. யோகி பாபு பங்கேற்கும் காட்சிகள் அடுத்த கட்ட படப்பிடிப்பின் போது படமாக்கப்பட உள்ளன.
AR ரஹ்மான் மற்றும் பிரபு தேவாவை வைத்து ஒரு ஸ்டைலிஷ் Promo-வை படத்தின் இயக்குனர் மனோஜ் NS சென்னையில் படமாக்கி உள்ளார். இது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் தலைப்பை அறிமுகப்படுத்தும் Promo விரைவில் வெளியாக உள்ளது.
25 ஆண்டுகளுக்கு பிறகு AR ரஹ்மானும், பிரபு தேவாவும் இணைந்துள்ள படத்தின் தலைப்பு என்ன என்பது ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் ஒன்றாக உள்ளது.
திரைப்படம் சிறப்பாக உருவாகி வருகிறது, குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் தரமான, நகைச்சுவை காட்சிகள் கொண்ட சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். அடுத்த ஆண்டில் 2025-ல் பான்-இந்திய படமாக திரைக்கு வர உள்ளது. எங்களின் புதிய முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Behindwoods வழங்கும் இந்த திரைப்படத்தை எங்கள் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS. இயக்கி வருகிறார். மனோஜ் NS, திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் தயாரித்து வருகின்றனர். அனூப் வி.எஸ் ஒளிப்பதிவிற்கும், ஷானு முரளிதரன் தயாரிப்பு வடிவமைப்பிற்கும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங்கிற்கும் பொறுப்பு ஏற்று உள்ளனர்.