மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ்
நடிகர் வைபவ்வின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
நடிகர் வைபவுடன் செல்முருகனும் இணைந்து நடித்து வருகிறார் இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, வைபவ்வின் 27 வது திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை படக்குழு நட்டுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றும் படக்குழுவினர் மற்றும் திரைப்படக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு என மொத்தம் 100 மரக்கன்றுகளை படக்குழு வழங்கியுள்ளது.