Take a fresh look at your lifestyle.

’ஒடேலா 2’ சீரிஸில் இருந்து முதல் முறையாக, சிவசக்தியாக தமன்னா பாட்டியாவின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது!

34

மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ், இயக்குநர் அசோக் தேஜாவுடன் இணைந்து அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் பல மொழி திரைப்படமான ’ஒடேலா 2’ சீரிஸில் இருந்து முதல் முறையாக, சிவசக்தியாக தமன்னா பாட்டியாவின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது!

ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ படத்தின் அடுத்த சீரிஸான ‘ஒடேலா2’ சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு காசியில் பூஜையுடன் தொடங்கியது. சம்பத் நந்தி திரைக்கதையில், அசோக் தேஜா இயக்கும் இப்படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் பேனர்களின் கீழ் டி மது தயாரிக்கிறார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவசக்தியாக தமன்னா இடம்பெற்றிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகை தமன்னா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டுள்ளார் என்பது போஸ்டர் பார்க்கும்போதே தெரிகிறது. அடர்ந்த முடிகளுடன் நாக சாதுவைப் போல உடையணிந்து, ஒரு கையில் புனிதத் தடியும், மற்றொரு கையில் டமாருவையும் ஏந்தி, நெற்றியில் மஞ்சள் பொட்டு, குங்குமத்துடன் சிவசக்தியாக முதல் பார்வை போஸ்டரில் தோற்றமளிக்கிறார் தமன்னா.

காசி தெய்வத்தை நோக்கி அவள் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்வதை இதில் பார்க்கலாம். ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்த முதல் பார்வை நிச்சயம் சிவராத்திரிக்கான ஒரு ஸ்பெஷல் ட்ரீட் என்றே சொல்லலாம். ’ஒடேலா 2’ கதை ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டது. அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் அதன் உண்மையான மீட்பர் ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எப்போதும் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை சுற்றி இதன் கதை இருக்கும்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ஹெபா படேல் மற்றும் வசிஷ்டா என் சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஎஃப்எக்ஸ் திரைப்படத்தில் முதன்மையானதாக இருக்கும். அதே நேரத்தில் ‘ஒடேலா 2’வில் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் உள்ளனர்.

சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, ’காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ராஜீவ் நாயர் இதன் கலை இயக்குநர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கானக் கதையாக இந்தப் படம் உள்ளதால் தேசிய அளவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள்: தமன்னா பாட்டியா, ஹெபா பட்டேல், வசிஷ்டா என் சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்ஷி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பாளர்: டி மது,
திரைக்கதை: சம்பத் நந்தி,
பேனர்: மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ்,
இயக்குநர்: அசோக் தேஜா,
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன். எஸ்,
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்,
கலை இயக்குநர்: ராஜீவ் நாயர்,
மக்கள் தொடர்பு: ரேகா,
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ