சென்னையில் நடைபெறும் காமிக் கான் இந்தியா விழாவில்”Endwars: TheChosen one” வரைபட நாவல்தமிழில் “இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்”என மொழிமாற்றம் செய்து அறிமுகம்
சென்னையில் நடைபெறும் காமிக் கான் இந்தியா விழாவில் “Endwars: The Chosen one” வரைபட நாவல் தமிழில் “இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்” என மொழிமாற்றம் செய்து அறிமுகம்
சென்னை,பிப்ரவரி,13,2024:காமிக் புத்தகங்கள் வாசிப்பாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “Endwars: The Chosen one” என்னும் காமிக் புத்தகம் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்‘ என்ற தலைப்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ள காமிக் கான் இந்தியா விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தப் புத்தகத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.
இதை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா தயாரித்துள்ளது. குயின்ஸ்லேண்ட் இயக்குனரும் தமிழக எம்.எல்.ஏ.வுமான அமிர்தராஜ் செல்வராஜ் எழுதியுள்ளார். இதேபோல் “Endwars: Volume 2 – Dark Conquest” என்று ஆங்கிலப் புத்தகமும் சென்னையில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் காமிக் கான் இந்தியா விழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
“Endwars: The Chosen one” என்னும் ஆங்கிலப் புத்தகம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ‘இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்‘ என்ற தலைப்பில் புகழ்பெற்ற உரையாடல் எழுத்தாளரும் புகழ்பெற்ற பாடலாசிரியருமான மதன் கார்க்கியால் நேர்த்தியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புத்தக வாசிப்பாளர்கள் தற்போது தங்களின் தாய் மொழியான தமிழில் படித்து “Endwars” என்ற வசீகர உலகத்தை படித்து மகிழலாம்.
17-ந்தேதி நடைபெறும் விழாவில் பிரபல இயக்குனரும் தீவிர காமிக் புத்தகப் பிரியருமான லோகேஷ் கனகராஜ் பங்கேற்று சரித்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை குறிக்கும் வகையில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்த வரைபட நாவலை அவர் வெளியிடுகிறார்.
முதல் சில புத்தகங்களில் தனது கையொப்பமிடப்பட்ட பிரதிகளை லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வழங்க உள்ளார். மேலும் அவருடன் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அம்சங்களைப் பற்றி விவாதிக்கவும் கலந்து பேசும் வாய்ப்பும் கிடைக்கும்.
இப்புத்தகத்தில் இடம் பெறும் படங்கள் மற்றும் விளக்கப் படங்களை புனேவைச் சேர்ந்த பிரபல கலைஞர் சவுரப் சவான் வடிவமைத்துள்ளார் மற்றும் இக்கதையை மெர்லின் ஜெமிமா மற்றும் விக்டர் ஜெயராஜ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சென்னை விழாவில் அறிமுகம் செய்வது குறித்து புத்தக தயாரிப்புக் குழு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளது. இந்த விழா பங்கேற்பாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்குவதோடு, இதில் பல்வேறு அமர்வுகள், குழு விவாதங்கள் மற்றும் காமிக்ஸ் உலகம் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசப்பட உள்ளது.
இறுதிப்போர் வரைபட நாவல் பற்றி: “Endwars: The Chosen one“ இது ஒரு காவிய அறிவியல் புனைகதை காமிக் தொடராகும், இது சூழ்ச்சி, புராணங்கள் மற்றும் சாகசங்களின் கதைகளைக் கொண்டுள்ளது. இதன் ஆசிரியர் அமிர்தராஜ் செல்வராஜ் அனைத்து வயதினரும் விரும்பும் வகையில் இந்தக் கதையை எழுதியுள்ளார். பல்வேறு சவால்கள், சூழ்ச்சிகளை இதில் வரும் கதாநாயகர்கள் எதிர் கொண்டு எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார். “இறுதிப்போர்” கிராபிக் நாவலை, புத்தக வாசிப்பாளர்களை வெகுவாக கவர்ந்திழுப்பதோடு அவர்கள் நினைத்துப் பார்க்காத கற்பனை உலகிற்கு அவர்களை அழைத்துச் செல்கிறது. அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த இந்த புத்தகம் பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆழமாக ஆராய்கிறது.