இந்தியாவின் மிகப்பெரிய வான்வெளி அதிரடி ஆக்ஷன் படத்தில் தேசபக்தி மிக்க பைலட்டாக கிருத்திக் ரோஷன் அசத்தும் பைட்டர் ட்ரெய்லர்
இந்திய ராணுவ கேப்டனாக லக்ஷ்யாவில் தனது முத்திரை பதிக்கும் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கிறங்கச் செய்த ஹிருத்திக் ரோஷன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சித்தார்த் ஆனந்தின் ஃபைட்டரில் இந்திய பாதுகாப்பு படை சீருடை அணிந்திருக்கிறார். இந்த முறை ஜெட் பைலட்டாக தனது அதிரடி நடிப்பில் அசத்தவிருக்கிறார் ஹிருத்திக் ரோஷன். ஷாம்ஷெர் பத்தானியா என்கின்ற பட்டி வேடத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஃபைட்டர் படத்தில் ஹிருத்திக் ரோஷன் அதிரடி காட்டுகிறார்.
இந்தப் பாத்திரத்தில் தேசபக்தி மிகுந்த வீர வசனங்களை ஹிருத்திக் ரோஷன் பேசும்போது அது பார்வையாளர்களை வெகுவாக உணர்ச்சி வசப்படச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
இந்திய விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் சீருடையில் மிருதுவாக தெரியும் ஹிருத்திக் ரோஷன் போர் விமானங்களை பறக்க விட்டு சாகச செயல்களில் ஈடுபடும்போது பார்வையாளர்கள் மூச்சடைத்துப் போவார்கள் என்பது நிச்சயம். ஃபைட்டர் படத்தின் ட்ரெய்லர் 2019-ல் புல்வாமா தாக்குதலின் பின்னணியை பற்றி பட்டி கதாபாத்திரத்தின் மூலம் காட்டுகிறது. இந்திய விமான படையின் தாக்குதலின் ஒரு பார்வையையும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கடினமான நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2024 ஜனவரி மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பைட்டர் படம் வெளியாக இருக்கும் நிலையில் டிரைலரை நெட்டிசன்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இந்தப் படம் ஹிருத்திக் ரோஷனின் முதல் 3டி படமாகும். அத்துடன் இது 3d imax வடிவத்திலும் வெளியாக உள்ளது. ‘பேங்க் பேங்க்’ 2014 ‘வார்’ 2019 போன்ற வெற்றிகரமான படங்களுக்கு பிறகு ஹிரித்திக் ரோஷன் மற்றும் சித்தார்த் ஆனந்த் ஆகியோரின் பிளாக் பஸ்டர் நடிகர்_ இயக்குனர் ஜோடியை ஒன்றிணைக்கிறது ஃபைட்டர் திரைப்படம். இது இயக்குனர் சித்தார்த் ஆனந்தின் லட்சியப் படம் என்று கருதப்படுகிறது இதுவரை கண்டிராத திரை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் உறுதியளிக்கிறது ஃபைட்டர்.
இந்தியாவின் முதல் வான்வழி ஆக்சன் படம் என்ற பெருமையும் பைட்டர் படத்திற்கு உண்டு.
Trailer Link
https://x.com/ihrithik/status/1746744950245454026?s=48&t=xK1Z-kJ0u5a2Fdq649sqpA