படம்: வட்டார வழக்கு
நடிப்பு: சந்தோஷ நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்தி வீரன் வெங்கடேஷ்
தயாரிப்பு: மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரடக்க்ஷன்
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: டோனி ஜான் சுரேஷ்
இயக்கம்: கண்ணுச்சாமி ராமச்சந்திரன
பி ஆர் ஓ : சுரேஷ் சந்திரா
மதுரை பின்னணியில் அமைக்கப்பட்ட பங்காளி.சண்டை கதை.
சொத்து பிரிப்பதில் ஏற்படும் பங்காளி சண்டை இரண்டு குடும்பங்களின் பகையாக மாறு கிறது. நேரம் பார்த்து ஒருவரை யொருவர் தாக்கிக் கொள்கின் றனர். இந்நிலையில் சந்தோ சுக்கும், ரவீனாவுக்கும் காதல் மலர்கிறது. பங்காளி சண்டை ஒருபுறம்.இருந்தாலும் காதலில் விழும் சந்தோஷ் ரவீனா மீது அதிக காதலில்.இருக்கிறார். ஒரு சமயம் ரவீனா, கதிர் அடிக்கும் எந்திரம் அருகே , நிற்கும்போது அவரது ஆடை மோட்டாரில் சிக்கி கிழிந்து அரை நிர்வாணமாகிறார் . ஊரும் அதை பார்க்கிறது இதையறிந்த சந்தோஷ் அவள் மீது கோபம் கொள்கிறான். அவளிடம் பேசுவதை தவிர்க்கிறான் மனம் உடைந்த ரவீனா விபரீத முடிவு எடுக்கிறார். அதைக் கண்டு கதறும் சந்தோஷ் மனநிம்மதி இழந்து வாடுகிறார் .இந்நிலையில் அவர் கொல்லப்படுகிறார். கொன்றது யார் என்பதற்கு கிளைமாக்ஸ் பகை கொப்பளிக்க பதில் அளிக்கிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு, ஏன் நீண்ட வருடங்களுக்கு பிறகு என்று கூட இளையராஜா இசையில் முழுக்க ஒரு கிராமத்து படம் வந்திருக் கிறது. அவரின் பாங்கான இசையும் 70ஸ் 80ஸ் கால கட்ட பாடல்களும் செவிக்கு இனிதாக வந்து பேசுவது அந்த காலகட்டத்துக்கே ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.
கோபக்கார இளைஞனாக சந்தோஷ்.நடித்திருக்கிறார். தெனாவட்டான நடையும் எதற்கெடுத்தாலும் கைநீட்டி அடிக்கச் செல்வதுமாள அசல்.கிராமத்து முரட்டுகாளை போல் சீறுகிறார்.
ரவீனா மீது காதல் பிறந்த பிறகு அவருடன் கண் சாடை பேச்சும், சீண்டலும் சிணுங்களுமாக கிராமத்து வாசனையுடன் ரொமான்ஸ் செய்வது ரசிக்க வைக்கிறது. திடீரென்று நடக்கும் அந்த திருப்பம் ஒருநிமிடம் அரங்கை உறைய வைக்கிறது.
காதலை சொன்ன அளவிற்கு குடும்ப பங்காளி மோதல் குறித்து சரியான விளக்கம் சொல்லாததால் கடைசி. வரையிலுமே குழப்பம் தொடர்கிறது.
இளையராஜா மோதிர கைகுட்டு இப்படத்துக்கு கிடைத்திருப்பது ஆச்சரியம்தான்.
ராஜாவின் இசை கேட்கும் எண்ணத்துடன் அரங்கில் சென் றால் பாதி மனநிறைவு கிடைக் கிறது . மிச்ச பாடல்கள் நம் மனதில் பதிந்த அந்த காலகட்ட பாடல்கள் திரும்ப ஒலித்து கஸ்தூரி மண சாமரசம் வீசுகிறது.
இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இந்த ஸ்கிரிப்ட்டை எப்படி வழங்க வேண்டும் என்பதை உணர்ந்து வழங்க முயற்சித்திருக் கிறார். ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இது பங்காளி சண்டை கதையாக இருந்தாலும் காதலும் தியாகமும் தான் ஓங்கி. நிற்கிறது.