Take a fresh look at your lifestyle.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தை ஒன்றிணைக்கும் இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளது டங்கி படக்குழு

51

டங்கி அற்புதமான நண்பர்களின் ஒரு நம்பமுடியாத பயணத்தை விவரிக்கிறது. ஐந்து நண்பர்கள் தங்கள் கனவுகளை நனவாக்க, ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள், அதில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், இந்த தீபாவளிக்கு நம் அன்புக்குரியவர்களுடன் இருப்பதன் மகிழ்ச்சியையும் பண்டிகை உணர்வையும் குறிக்கும் வகையில், டங்கி திரைப்படத்திலிருந்து இரண்டு அட்டகாசமான புதிய போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.

அன்பு நிறைந்த மனது, சந்தோஷம் மற்றும் நட்பின் பெருமையை சொல்லும் இரண்டு புதிய போஸ்டர்கள் டங்கி படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களால் நடிகர்களை அலங்கரிக்கப்பட்டுள்ளது, இதில் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சர், அனில் குரோவர் ஆகியோருடன் நம் அனைவரின் குடும்பத்தையும் நட்பையும் ஒருங்கிணைக்கும் ஷாருக்கானும் உள்ளனர்.

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உருவாக்கத்தில், இதயத்தைத் கவரும் படைப்பான, டங்கி படத்தின் உலகை அறிமுகப்படுத்தும், டன்கி டிராப் 1 பெரும் வரவேற்பை பெற்றாலும், இந்த புதிய போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், வண்ணமயமான கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஆழமான பிணைப்பையும் வெளிப்படுத்துகின்றன.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.

https://x.com/iamsrk/status/1722962499669045539?s=46&t=PusltWkTns46RNMqjWxAeA