Take a fresh look at your lifestyle.

‘அவனிடம் சொல்வேன்’ : குழந்தைகள் மீதான போரின் தாக்கத்தை விளக்கும் பாடல்

61

தனி இசைக்கலைஞர்களை ஆதரிப்பதற்காக, பா மியூசிக் தொடர்ந்து இயங்கி வருகிறது. அந்த வகையில் இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி இசையில், பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில் ‘அவனிடம் சொல்வேன்’ என்ற பாடல் இத்தளத்தில் வெளியாகியுள்ளது. உலகெங்கும் போரின் தாக்கங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த அவலச் சூழலால் குழந்தைகளின் வாழ்க்கை எத்தனை பாதிப்புக்குள்ளாகிறது என்பதை ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் இருந்து வெளிப்படுத்தும் வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளை வடித்துள்ளார்.

 

இப்பாடலைப் பா மியூசிக் யூடியூப் தளத்தில் கேட்கலாம்.

பாடல் இணைப்பு 🔗 https://youtu.be/-bvD-smNiKY