Take a fresh look at your lifestyle.

சந்திரமுகி 2 திரைப்பட விமர்சனம் குழந்தைகள் விரும்பும் படமாக சந்திரமுகி 2

76

ரங்கநாயகி (ராதிகா சரத்குமார்) தலைமையிலான ஒரு பணக்கார குடும்பத்தில் தொடர்ந்து பல்வேறு துர்சம்பவங்கள் நடக்கின்றன.பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ரங்கநாயகி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் குல தெய்வத்துக்கு ஒரு பெரிய பூஜை செய்ய வேண்டும், என்று குடும்ப சாமியார் (ராவ் ரமேஷ்) அறிவுறுத்துகிறார். அவர்கள் பூஜை செய்ய வேண்டிய கோவில் வேட்டையன் அரண்மனைக்கு அருகில் உள்ளது. குடும்பம் வேட்டையபுரம் அரண்மனைக்கு பயணம் செய்கிறது. அதே போல், வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட மகளுக்கு பிறந்த குழந்தைகளையும் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சாமியார் கூறியதால், இந்தக் குழந்தைகளும் அவர்களது கார்டியன் பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) இங்கு வருகின்றனர். இப்போது அரண்மனைக்கு முருகேசன் (வடிவேலு) சொந்தக்காரர். அவர் அந்த அரண்மனையை ரங்கநாயகியின் குடும்பத்திற்கு குத்தகைக்கு விடுகிறார். ஆனால் அரண்மனையில் சந்திரமுகியின் தீய ஆவி இருப்பதைப் பற்றி அவர்களுக்கு அதிகம் தெரியாது. முருகேசன் ரங்கநாயகி மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டின் தெற்கு நோக்கி செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார். அந்த வீட்டை குத்தகைக்கு எடுத்து தங்கும் அவர்களை, தங்கள் குலதெய்வக் கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுக்கிறார் ஒரிஜினல் சந்திரமுகி (கங்கனா). விஷயங்கள் மோசமாகி போக வேட்டையன் தான் மையப் புள்ளியாக இருக்கிறார். வேட்டையன் யார், என்ன நடக்கிறது? பின்னர் ராதிகாவின் குடும்பம் என்ன சவால்களைச் சந்தித்தது? வேட்டையனுக்கும் (லாரன்ஸ்) ராதிகா குடும்பத்துக்கும் எப்படி தொடர்பு? சந்திரமுகியை தடுத்து ரங்கநாயகியின் குடும்பம் குலதெய்வம் கோயிலில் பூஜை செய்ததா என்பதே சந்திரமுகி 2.