Take a fresh look at your lifestyle.

லக்‌ஷ்மி மஞ்சுவின் ஆன்மீக எழுச்சி மற்றும் தேசபக்தி பிரதிபலிப்பு!

71

நடிகை, தயாரிப்பாளர், தொலைக்காட்சி வர்ணனையாளர், இயக்குநர் என பன்முத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு, சமீபத்தில் பொற்கோயில் மற்றும் நம் நாட்டின் முக்கிய சின்னமான வாகா எல்லைக்கு பயணம் மேற்கொண்டார். அவருடைய இந்த பயணம் அவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது மட்டும் இன்றி, அவருடைய கண்ணோட்டத்தில் நீண்டதொரு தாக்கத்தையும், தேசபக்தியின் உயர்ந்த உணர்வையும் பிரதிபலித்துள்ளது.

மேலும், தனது மகளின்பிறந்தநாளையொட்டி பொற்கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்த லக்‌ஷ்மி மஞ்சு, தனது மகளின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டத்தை பொற்கோயில் பயணம் மூலம் அர்த்தமுள்ளதாக மாற்றியதோடு, சக்தி வாய்ந்த எண்ணத்தையும் தன்னுள் அமைத்தார். ஆன்மீக ஸ்தலங்கள் மீதான ஆழ்ந்த மதிப்பிற்கு பெயர் பெற்ற லக்‌ஷ்மி மஞ்சு, பொற்கோயில் வெளிப்படுத்தும் ஆழ்ந்த ஆற்றல்கள் மற்றும் அமைதியில் திளைத்தார்.

பொற்கோயிலின் அமைதியான சூழல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் ஆகியவற்றால் நெகிழ்ச்சியடைந்த லக்‌ஷ்மி மஞ்சுவின் ஆன்மாவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அவருடைய இதயத்தையும் தொட்டது அந்த இடத்தின் புனிதம். பிரார்த்தனையில் தனது நேரத்தை செலவிட்ட லக்‌ஷ்மி மஞ்சு, தெய்வீகத்துடன் இணைந்து, தனது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக கடவுளிடம் வேண்டினார்.

பொற்கோயில் பயணத்தை தொடர்ந்து புகழ்பெற்ற வாகா எல்லைக்கு தனது ஆன்மாவைத் தூண்டும் பயணத்தை தொடங்கிய லக்‌ஷ்மி மஞ்சு, அங்கு நடந்த தேசபக்தி மற்றும் காவலர் விழா உள்ளிட்டவைகளால் மயக்கும் அனுபவத்தை பெற்றார்.

நமது எல்லைகளைக் காக்கும் துணிச்சலான வீரர்களைப் பற்றிய மகத்தான பெருமை மற்றும் போற்றுதல் லக்‌ஷ்மி மஞ்சுவை வெகுவாக கவர்ந்தது. ஒரே பாடலுக்கு 2000-க்கும் அதிகமானவர்கள் ஆரவாரம் செய்தது, அம்மக்களின் ஒற்றுமை நாட்டின் மீதான அன்பை பகிரப்பட்டதோடு, அவருடைய இதயத்தில் ஒற்றுமை மற்றும் தேசபக்தியின் உணர்வைத் தூண்டியது. எல்லையில் இருந்த ராணுவ வீரர்களுடனான சந்திப்பும், அவர்களின் தியாகம் பற்றிய சிந்தனையும் லக்‌ஷ்மி மஞ்சுவிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இத்தகைய பெருமை மிகு மற்றும் அமைதியான பயணம் குறித்து லக்‌ஷ்மி மஞ்சு கூறுகையில், ”பொற்கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தது மற்றும் வாகா எல்லைக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்டுகளித்தது எனக்கு ஒரு ஆழமன மற்றும் அமைதியான பயணமாக இருந்தது. பொற்கோயிலின் அமைதியும், வாகா எல்லையில் உள்ள தேசபக்தி உணர்வும் என் ஆன்மாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது என்னை தியாகங்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. நமது துணிச்சலான வீரர்கள் பற்றி எனக்குள் ஒரு ஆழமான போற்றுதலையும், மரியாதையையும் ஏற்படுத்தியது.

இந்த பாகுபாடற்ற மாவீரர்களின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் சித்தரிக்கும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது மூலம் அவர்களை கெளரவிப்பதோடு, நானும் ஊக்கமடைவேன். தேசத்திற்கான அவர்களின் தன்னலமற்ற சேவை அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டியதாகும். உண்மையிலேயே ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த இந்த பயணம் எனக்கு புதிய புத்துணர்ச்சியையும், நன்றியுணர்வையும் கொடுத்திருக்கிறது. என்னால் இயன்ற விதத்தில் நாட்டுக்காக என் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என்றார்.