தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால் ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்சன் நிறைந்த திரில்லர் படங்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவு. அதை பூர்த்தி செய்யும் விதமாக விஸ்வரூபி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து, அறிமுக இயக்குனர் யுவராஜ்.D இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ளது ஜாஸ்பர் திரைப்படம்
முழுக்க முழுக்க ஆக்ஷன், சண்டை காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா தத்தா மற்றும் விவேக்கின் மென்மை யான காதல் காட்சிகளும், பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்து, பாடகர்கள் பிரதீப் குமார் மற்றும் சைந்தவியின் இனிமையான குரலில் பாடல் காட்சிகளும் உருவாகியிருக்கிறது இந்த ஜாஸ்பர் திரைப்படத்தில்.
இத்திரைப்படத்தில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, சி.எம் பாலா, ராஜ் கலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டையம் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
90 காலகட்டங்களில் ஒரு ஹிட்மேன் ஆக வலம் வரும் கதாநாயகன், தன் வாழ்வில் சந்தித்த பெரும் இழப்பினால் அவை அனைத்தையும் விட்டுவிட்டு ஓய்வு காலத்தில் அமைதியான ஒரு தனிமை வாழ்க்கையை வாழ்ந்து வரும் கதாநாயகனுக்கு திரும்பவும் தன் வாழ்வில் ஒரு இழப்பை சந்திக்க நேரிடுகிறது. அந்த இழப்பை தவிர்ப்பதற்கு மறுபடியும் ஹிட்மேன் ஆக உருவெடுக்கிறார், இந்த படத்தின் கதாநாயகன் ஜாஸ்பர்.
இணையத்தில் வெளியாகி உள்ள ஜாஸ்பர் படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.