Take a fresh look at your lifestyle.

கொரோனா காலத்தில் உடலை ஆற்றலோடு வைத்துக் கொள்வது எப்படி? – விளக்குகிறார் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி

221

நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அதிலும் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வார். அதுதான் அவர் 82 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கி வருகிறது.

ஆகையால், தன்னைப் போலவே எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக GK Reddy என்ற அவரது பெயரிலேயே ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார்.

முக்கியமாக, இந்த கொரோனா காலத்தில் உடல் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை விவரிக்கிறார். பல்வேறு உடற்பயிற்சிகளை பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த காணொளியில் அவரே உடற்பயிற்சி செய்தும் காட்டுகிறார்.