Take a fresh look at your lifestyle.

ஐயோசாமி நீ எனக்கு வேணாம் வைரலாகி வரும் பாடல் .

134

“ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதூம் ”

கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக ஒரு பாடல் இன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.

🔗 ▶️ https://youtu.be/xk5s4JMqwkA

விஜய் ஆண்டனியின் “நான்” திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதிய தமிழ் சினிமாவில் அறிமுகமான இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்தான் இப்பாடலை எழுதியுள்ளார்.

இவர் ஏற்கனவே விஸ்வாசம்,அண்ணாத்த படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் வைரலாகின.ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார்.

பாடலுக்கு இசையமைத்துள்ளார் இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக பாடலைப்பாடியுள்ளார் பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலக்க.

மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மனிகே மகே ஹித்தே பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

🔗 ▶️ https://youtu.be/xk5s4JMqwkA

Ayyo Saami
ஐயோ சாமி