Take a fresh look at your lifestyle.

SonyLIV தளம் தனது அடுத்த அதிரடி இணைய தொடரை அறிவித்துள்ளது.

142

1940 களின் பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த வலைத் தொடர் உருவாகிறது. சினிமா பிரபலங்களைப் பற்றி அவதூறான கட்டுரைகளை எழுதியதற்காக கொல்லப்பட்ட பிரபல மஞ்சள் பத்திரிகையாளரின் கொலையைச் சுற்றி கொலை வழக்கில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரின் தொடர்புகுள் குறித்து அறியப்படாத சதிகளையும் மர்மங்களையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தும். “தி மெட்ராஸ் மர்டர்” என்ற இந்த வெப் சீரிஸை சூரியபிரதாப் S எழுதி இயக்குகிறார். பிரபல இயக்குநர் விஜய் இந்தத் தொடரின் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை Big Print Pictures பேனரின் கீழ் IB கார்த்திகேயன் தயாரிக்கிறார்.

இத்தொடரின் ஷோ ரன்னர் AL விஜய் கூறுகையில்.., “மெட்ராஸ் பிரசிடென்சியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் மிகவும் சவாலான “தி மெட்ராஸ் மர்டர்” தொடரில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் அற்புதமான அனுபவத்தை வழங்க, எங்கள் முழு மூச்சுடன் உழைக்கும். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் முழு அர்ப்பணிப்புடன் நடந்து வருகிறது. டிஜிட்டல் திரையில் சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தை காண காத்திருங்கள்.”