Take a fresh look at your lifestyle.

கொலைச் சேவல் திரைவிமர்சனம்

44

கொலைச் சேவல் திரைவிமர்சனம்

RP பாலா @ கௌசல்யா தயாரிப்பில் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு, பால சரவணன், கஜராஜ் விஜய்சத்யா ஆதவ் சந்த்ரா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை மற்றும் பலர் நடித்து மார்ச் 13 ல் வெளியாகும் படம் கொலைச்சேவல்.
கதை

கலையரசன் தனது கர்ப்பிணியான மனைவி குடும்பத்துடன் சந்தோஷமாக சாமி கும்பிட குடும்ப குல தெய்வமான நிறைசூழி தெய்வத்துக்கு பொங்கல் வைத்து சேவல் கோழி அறுத்து சாமி கும்பிட வந்து இறங்கி வேலையை செய்ய ஆரம்பிக்கின்றனர். இவர்கள் சாமி கும்பிடும் அருகே ஒரு குரூப் சீட்டு விளையாடுகிறது. அதில் ஒருவன் இவர்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அதே சாமி கும்பிடும் இடத்துக்கு கஜராஜ் தன் மகனுடன் வருகிறார். நிறைசூழி தெய்வம் முன் என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாராஸ்யமான படத்தின் மீதிக்கதை.

கலையரசன் காளி கதாபாத்தரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகி தீபா பாலு அனுசுயா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். பால சரவணின் காமெடி ரசிக்கவைக்கிறது. கஜராஜ் விஜய்சத்யா ஆதவ் சந்த்ரா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
PG முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
சந்தனின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.

VR துதிவாணன் அழகான குடும்பக்கதையை தெய்வத்தோடு இணைத்து நடந்த உண்மைக்கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.

மதிப்பெண் 3.5/5