விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது படம் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ’ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்திருப்பது நுணுக்கமான உணர்வுகளும் யதார்த்தமும் நிறைந்த செழுமையான திரைக்கதையை ரசிகர்களுக்கு தரும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழு திருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் காட்சியமைப்பு படத்தின் ஆன்மாவையும் உணர்வுகளையும் அழகாகப் பதிவு செய்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர். டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் ’ஹைக்கூ’ திரைப்படத்தை தயாரிக்கின்றனர். படக்குழுவின் அர்ப்பணிப்பும் படத்தின் தரமும் சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்
தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இதில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. ‘ஹைக்கூ’ திரைப்படம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பார்ட்னர்ஸ் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் விஷன் சினிமா ஹவுஸ், ’ஹைக்கூ’ படம் குறித்தான அடுத்தடுத்த தகவல்களை விரைவில் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறது.