ரெட் லேபில் திரைவிமர்சனம்
கே ஆர் வினோத் இயக்கத்தில் லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனீஷ்காந்த், அனுமோகன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ரெட் லேமில்.
இசை : கைலாஷ் மேனன்
ஒளிப்பதிவு : சதீஷ் மெய்யப்பன்
தயாரிப்பு: ரெவ்கென் பிலிம் பேக்டரி – லெனின்
கதை
கோவையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் தலைவருக்கான தேர்தல் நடக்கிறது. பேராசிரியர்களையே மிரட்டும் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் கொண்ட மாணவர்) எம் எல் ஏ மகன்) ஒருவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தலைவர் ஆனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், பேராசிரியர்கள் சிலர் அந்த மாணவரை எதிர்த்து மற்றொரு மாணவரை போட்டியிட வைப்பதோடு, அவர் வெற்றி பெறுவதற்காக அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தலைவரான தனது நண்பர் நாயகன் லெனினின் உதவியை நாடுகிறார்கள்.
கல்லூரி காலத்தில் இருந்தே அடிதடி என சுற்றிக்கொண்டிருந்கதாநாயகன் லெனின், தற்போது திருந்தி வாழும் நிலையில், மீண்டும் கல்லூரி தேர்தல், மோதல் ஆகியவை வேண்டாம் என்று தவிர்க்கிறார். ஆனால், அதே கல்லூரியில் படிக்கும் அவரது காதலியின் வற்புறுத்தலால் தேர்தல் களத்தில் பயணிக்க சம்மதிக்கிறார். தேர்தல் நடக்கிறது, லெனின் ஆதரவு பெற்ற மாணவர் வெற்றி பெறுவதால், அரசியல் செல்வாக்கு கொண்ட மாணவர் அவர் மீது கடும் கோபம் கொள்கிறார்.
இந்த நிலையில், லெனின் காதலுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. தன் காதல் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனது காதலியை தேடி கல்லூரி வளாகத்திற்குள் செல்லும் லெனின், சந்தர்ப்ப சூழ்நிலையால் பெரும் சிக்கலில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு திட்டம் போடுகிறார். அந்த சிக்கல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகரா என்ற கேட்குமளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகி அஸ்மின், கெடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.
ஆர்.வி.உதயகுமார் எல்ஏவாக வேடத்தில் வில்லனாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
முனீஷ்காந்த், அனுமோகன் பொன் பார்த்திபன், எம். எல். ஏ மகன், இவரை எதிர்த்து போட்டியிடும் மாணவர், பேராசகரியர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
சதீஷ் மெய்யப்பனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். கைலாஷ் மேனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது.
பொன்பார்த்தீபனின்
கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் பின்னணியில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை ஏல்லோரும் ரசிக்கும்படி சுவையாக சொல்லியுள்ளார் இயக்குநர் கே ஆர் வினோத். பாராட்டுக்கள்.