Take a fresh look at your lifestyle.

PRESS NOTE – TAMIL and ENGLISH

20

Docu Fest Chennai தென் ஆசியாவிலும் அதற்கு அப்பாலும் உருவாகும் ஆவணப்படங்களை கொண்டாடும் ஒரு விழாவாகும். மறைந்துள்ள உண்மைகளை வெளிப்படுத்தவும், புறக்கணிக்கப்பட்ட குரல்களை வலுப்படுத்தவும், நாம் பகிர்ந்து கொள்ளும் உலகத்தைப் பற்றி அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்கவும், நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியில் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம்.

சென்னையின் கடல் மரபுக்கு அஞ்சலியாக எங்கள் லோகோவில் இடம்பெறும் கலங்கரை விளக்கைப் போல, ஆவணப்பட இயக்குநர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வழிகாட்டும் ஒளியாக இருக்க விரும்புகிறோம். வலிமையான கதைகள் தங்களுக்கான பார்வையாளர்களை அடையும் ஒரு வெளி நிலத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

ஜனவரி 22ஆம் தேதி தொடங்கிய இந்த இரு நாள் விழா, முதன்மை விருந்தினராக இயக்குநர் பிரேம் குமார் அவர்களாலும், சிறப்பு விருந்தினராக ICAF அமைப்பைச் சேர்ந்த திரு. சிவன் கண்ணன் அவர்களாலும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் 12க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவான 14 ஆவணப்படங்கள் இரண்டு நாட்களாக திரையிடப்படுகின்றன. இந்த விழா அனைவருக்கும் இலவசமாகவும் திறந்தவையாகவும் உள்ளது.