Take a fresh look at your lifestyle.

பாராட்டுகள் பெற்ற ’ஸ்டீபன்’ படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி உளவியல் த்ரில்லரை முழுமையாக மறுவரையறை செய்கிறது!*

29

*நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்களிடம் பரவலான பாராட்டுகள் பெற்ற ’ஸ்டீபன்’ படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி உளவியல் த்ரில்லரை முழுமையாக மறுவரையறை செய்கிறது!*

நெட்ஃபிலிக்ஸின் உளவியல் த்ரில்லர் படமான ’ஸ்டீபன்’ தற்போது உலகளாவிய ஆங்கிலம் அல்லாத படங்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை யாரும் எதிர்பார்த்திராத படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி வெளியாகவுள்ளது. இறுதிவரை கதையின் சஸ்பென்ஸை தக்க வைத்த இந்த தமிழ் படம் கதையின் போக்கையே மாற்றி அமைத்தது. முடிவு என்று நினைத்த இடத்தில் இருந்து மீண்டும் கதைக்கான சாத்தியத்தைக் காட்டிய இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது பார்க்கலாம்.

அறிமுக இயக்குநர் மிதுன் இயக்கி இருக்க, கதையின் நாயகனான கோமதி சங்கர் இணைந்து எழுதிய ’ஸ்டீபன்’ கதை வழக்கமான ஒன்று அல்ல. பஸ் சீக்வன்ஸ் முடிச்சுகளை ஒன்றாக இணைக்கவில்லை. மாறாக அது முடிச்சுகளை அவிழ்க்கிறது. இது முடிவின் வெளிப்பாடா அல்லது ஒரு பெரிய கதையின் முதல் படியா? அந்தக் கேள்விதான் த்ரில். கிரெடிட்களுக்குப் பிறகு அதன் மிகவும் சக்திவாய்ந்த பன்ச்சை மறைப்பதன் மூலம் கதை முடிந்த பின்னும் உரையாடலை ‘ஸ்டீபன்’ தொடங்கி வைக்கிறான். பயணத்தின் மிகவும் உற்சாகமான பகுதி அதன் முடிவில்தான் தொடங்கும்!