Take a fresh look at your lifestyle.

Heartiley Battery Web Series Review

121

ஹார்ட்டிலே பேட்டரி வெப் சீரிஸ் விமர்சனம்

தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல் சீரிஸை ZEE5 வழங்கியிருக்கிறது

செந்தில் ராஜன் எழுதி இயக்கியுள்ளார். குரு லக்ஷ்மன் சித் ஆகவும், பாடினி குமார் சோஃபியாவாகவும் நடித்துள்ளனர்.

கதை

கதாநாயகி சோபியா லவ் மீட்டர் என்ற பெயரில் கருவி ஒன்றை உருவாக்குகிறாள் காதலிப்பதாக சொல்பவர்களின் கைரேகையை அந்த கருவி மீது பதிவு செய்தால் அவர்கள் நிஜமாகவே காதலிக்கிறார்களா? பொய்யாக பழகுகிறார்களா? என்பதை சொல்லிவிடும் அதை வைத்து ஒரு சில காதல் ஜோடிகளை சோதித்துப் பார்க்க அதனால் கிடைக்கிற அனுபவங்கள் ஏடாகூடமாக இருக்கிறது இந்த சூழ்நிலையில் கதாநாயகனை சந்திக்கிறாள். அவன் மீது காதல் வசப்படுகிறாள். அவளுக்கு அவனைப் பிடித்திருந்ததால் அவனை காலிக்கிறோமா? இல்லையா? என்ற குழப்பம் ஏற்பட லவ் மீட்டர் வைத்து குழப்பத்தை தீர்த்துக்கொள்ள நினைக்கிறாள் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே இந்த வேப் சீரிஸின் சுவாரஸ்யமான மீதிக் கதை

கதிநாயகனாக குரு லெஷ்மண் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக பாடினி குமார் கொடுத்த கதாபாத்தரத்தை சிறப்பாக செய்துள்ளார். கதாநாயகன் தந்தையாக ஜீவாரவி
மற்றும் சுமித்ரா தேவி, அனித் யாஷ் பால், யோகா லட்சுமி, இனியாள், ஷர்மிளா, பிரவீணா பிரின்சி, கலை, அஜித், பவித்ரா, சீனு என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். கூலி சௌந்தரராஜனின் ஓளிப்பதிவு தொடருக்கு பெரிய பலம். மைக்கேள் ஆகாஷின் பிண்ணனி இசை ரசிக்கவைக்கிறது.

இயக்குநர் சந்தில் ராஜன் லவ் மிஷினை வைத்து அறிவியலும் காதலும் கலந்து நல்ல வெப் சீரிஸை சுவாராஸ்யமாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.