Take a fresh look at your lifestyle.

மகாசேனா திரைவிமர்சனம்

48

தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், சிருஷ்டி டாங்கே, யோகிபாபு, ஜான்விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா, விஜய் சேயோன், சுபாங்கி ஜா, சிவகிருஷ்ணா, இலக்கியா மற்றும் பலர் நடித்து வெளியாகியாருக்கும் படம் மகாசேனா.

கதை

செங்குட்டுவன் கங்காவை காதலிக்கிறான். கங்காவின் அப்பாவை செங்குட்டுவன் அப்பா கொன்றுவிட்டதாக கங்கா உறவினர்கள் சொல்ல காதல் பிரிவு ஏற்பட்டு மலையின் அடிவார மக்களுக்கு கங்கா தலைவியாக ஆகிறாள். செங்குட்டுவன் மலைமேல் உள்ள மக்களுக்கு தலைவனாகிறான். மலைமேல் உள்ள சாமிக்கு திருவிழா நடத்த ஆயுத்தமாகிறான் சொங்குட்டுவன், அந்த திருவிழா சமயம் சக்தி வாய்ந்த சாமி சிலையை திருடி விற்க கங்கா திட்டமிடுகிறாள் பாரஸ்ட்டர் அதிகாரி ஜான் விஜய் உதவியுடன். இவர்களுக்கு தலைவனாக கபீர் துஹான் சிங் இருக்கிறார். திட்டமிட்டபடி திருவிழா சமயம் விசிபல் சாமி சிலயை திருடி விற்றார்களா? செங்குட்டுவன் அவர்களின் திட்டத்தை முறியடித்து சாமி சிலையை காப்பாற்றி திருவிழா நடத்தினாரா? கங்கா அப்பா எப்படி இறந்தார்? என்பதற்கெல்லாம் விடை சொல்வதே மகாசேனா படத்தின் மீதிக்கதை.

செங்குட்டுவனாக விமல் நடிப்பிலும் சண்டைக் காட்சிகளிலும் நடனத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். விமல் மனைவியாக சிருஷ்டி டாங்கே சிறப்பாக நடித்துள்ளார். கங்காவாக மஹிமா குப்தா மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார். பாரஸ்ட் அதிகாரியாக ஜான்விஜய் வில்லத்தனமான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக கபீர் துஹான் சிங்கின் நடிப்பு மிரட்டல். யோகிபாபு காமெடி பராவாயில்லை ரகம். விஜய் சேயோனின் உடல்வாகும் நடிப்பும் மிரட்டல். சுபாங்கி ஜா, சிவகிருஷ்ணா, இலக்கியா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். பிரவீண் குமாரின் பாடல்கள் இசை ரசிக்கவைக்கிறது. உதய்பிரகாஷ்ஷின் பிண்ணனி இசை படத்திற்கு பலம். மனாஸ் பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் விசிபல் சாமி சிலையை திருடும் சம்பவத்தை கதையாக கொண்டு மலை பேக் டிராப்பில் சுவராஸ்யமாக சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் சுவாராஸ்ய படுத்தி சொல்லியிருக்கலாம். வாழ்த்துக்கள்.