Take a fresh look at your lifestyle.

அங்கம்மாள் திரைவிமர்சனம்

1

விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், பரணி, சரண்,தென்றல், யாஸ்மின், முல்லையரசி,சுதாகர், யோகேஷ்வரன், வினோத் ஆனந்த், அனுசுயா மற்றும் பலர் நடித்து டிசம்பர் 5 ல் வெளியாகும் படம் அங்கம்மாள். கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிடுகிறது.

கதை

கீதா கைலாசத்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணி விவசாயம் பார்க்கிறார். இளைய மகன் சரண் டாக்டருக்கு படித்துள்ளார். அம்மா சொல்வதை கேட்டு நடக்கிறார்கள் மருமகள் உள்பட. இந்த சூழ்நிலையில் நகரத்தில் ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறார் இளைய மகன் சரண். பெண்ணின் தந்தையும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்கிறார். பெண் வீட்டார் தன் வீட்டிற்கு வரும்போது அம்மா கீதா கைலாசம் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று நினைக்கிறார். , ஜாக்கெட் அணியும் பழக்கமே இல்லாத அம்மா கீதா கைலாசத்தை ஜாக்கெட் அணிய சொல்லத் தயக்கப்பட அவரது அண்ணி மூலம் சொல்கிறார். ஜாக்கெட் அணிய விருப்பம் இல்லாமல் இருக்கும் கீதா கைலாசம் :இளைய மகன் ஆசைப்பட்படி ஜாக்கெட் அணிந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கீதா கைலாசம் கதையின் நாயகியாக அங்கம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார். பாராட்டுக்கள். மூத்த மகனாக பரணி இளைய மகனாக சரண் நன்றாகவே நடித்துள்ளார்கள்.
தென்றல், யாஸ்மின், முல்லையரசி,சுதாகர், யோகேஷ்வரன், வினோத் ஆனந்த், அனுசுயா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.
முகமத் மகபூல் மன்சூரின் இசை ரசிக்கவைக்கிறது.
அன்ஜாய் சாமுவேலின் ஓளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் எழுத்தாளர் பெருமாள் முருகன் கோடித்துணி வாழ்வியலின் எதார்த்த கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார். பாராட்டுக்கள்.