Take a fresh look at your lifestyle.

BP 180 Movie Review

57

ரேடியன்ட் இன்டர்நேஷனல் மூவிஸ் மற்றும் அதுல் இந்தியா மூவிஸ் சார்பில் பிரதிக் டி சத்பர் & அதுல் எம் போசாமியா தயாரிப்பில்
ஜே.பி இயக்கத்தில் தன்யா எஸ் ரவிச்சந்திரன், மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், அருள்தாஸ், தமிழ், ஸ்வேதாதோரதி மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் BP180.

கதை

டேனியல் பாலாஜி சென்னையில் ஒரு மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். அவரை சில கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது. செய்கிறது. மறுபுறம் பாக்யராஜின் மகள் விபத்தில் இறந்துவிட போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் தனது மகளின் உடலை பெற முயற்சி செய்கிறார். ஆனால் மருத்துவர் தன்யா ரவிச்சந்திரன் சட்டத்தின் படி போஸ்ட்மார்ட்டம் செய்துதான் உடலை தரமுடியும் என்று உறுதியுடன் இருக்கிறார். இதனால் கேங்ஸ்டர் டேனியல் பாலாஜிக்கும், அரசு மருத்துவமனை மருத்துவரான தன்யா ரவிச்சந்திரனுக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் எப்படி பழிவாங்கும் படலமாக மாறுகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

தன்யா ரவிச்சந்திரன் நேர்மையான மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளார். மறைந்த டேனியல் பாலாஜி வில்லனாக நடிப்பில் மிரட்டியுள்ளார். இயக்குநர் கே பாக்யராஜ் தந்தையாக சிறப்பாக நடித்துள்ளார்.
அருள்தாஸ், தமிழ், ஸ்வேதாதோரதி என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை ரசிக்கவைக்கிறது
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

இயக்குனர் JP பழிவாங்கும் கதையை எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.