Take a fresh look at your lifestyle.

சூர்யா 40 பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்.. ரசிகர்கள் உற்சாகம்

329

சன் பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் ரஜினி, விஜய் மற்றும் சூர்யா நடிக்கும் படங்களை தயாரிக்கிறது. இதில் ரஜினியின் அண்ணாத்த தீபாவளிக்கு வெளிவரும் நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிடுவதாக அறிவித்தது. விஜய்யின் பீஸ்ட் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அடுத்த வருடம் வெளிவரயிருக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் வெளியிட்டது. அன்றிரவே செகண்ட் லுக்கையும் வெளியிட்டது.சூர்யாவின் 40 வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பாண்டிராஜ் இயக்கம். ப்ரியங்கா மோகன் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா ஊரடங்கால் தடைப்பட்ட படப்பிடிப்பு ஜுலை 13 ஆம் தேதி மீண்டும் தொடங்கியுள்ளது..