*திருவுருவப் படம் திறந்த பிறகு…*
*சிறப்பு கல்வேட்டு ஒன்றினை திறப்பதற்கு முன் சினேகன் பேச்சு…*
உங்களோடு பயணிக்க தொடங்கிய காலத்தில் இருந்து உங்களுக்கு தெரியாமலோ, உங்களிடம் சொல்லாமலோ எதையும் செய்தது இல்லை.
முதல் முறையாய் ஒரு இடைச்செருகலாக ஒரு தகவலை உங்களிடம் தெரிவிக்க முயல்கிறேன் மன்னிக்கவும்.

நான் பிக்பாஸ் நிகழ்வில் இருக்கும் போது அதில் வென்றால் எனது சொந்த கிராமத்தில் ஒரு நூலகம் கட்டுவேன் என்று சொல்லிருந்தேன் என்பது அனைவரும் அறிந்ததே.
எனக்கு ஒரு பிடிவாதக்குணம் இருக்கிறது அது சரியா, தவறா என்பது எனக்கு இன்று வரை தெரியவில்லை .
நாக்கும் -வாக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது தான் அந்த பிடிவாதக் குணம் ஒன்றை வாய் மொழியாக கூறினாலும் அதனை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதற்காக உழைப்பேன்.

பிக்பாஸ் நிகழ்வில் நான் வெல்லவில்லை என்றாலும் எப்படியாவது ஒரு நூலகத்தை என் ஊரில் கட்ட வேண்டும் என்று முயற்சித்தேன்.
அதுவும் பூர்விக இடத்தில் கட்டக்கூடாது என்னுடைய வருமானத்தில் தான் அந்த இடத்தை வாங்கி கட்ட வேண்டும் என்றும் பிடிவாதமாக இருந்தேன்.
என்னால் எப்போதெல்லாம் முடிந்ததோ அப்போதல்லாம் ஒரு செண்ட் இரண்டு செண்ட் என்று கொஞ்ச கொஞ்சமாக இடத்தை வாங்கியும் முடித்து விட்டேன்.
அந்த இடத்தில் தற்போது நூலகம் மட்டுமல்ல நம் பரம்பரிய கலைகளை கற்றுக் கொள்ளும் ஒரு கலைக்கூடமும், வளரும் தலைமுறைகள் வந்தமர்ந்து படிக்கும் ஒரு படிப்பகமும் அமைப்பது என்று முடிவெடுத்தேன்.

அதற்கான கட்டிட வறைப்பட பணிகளும் தொடங்கி விட்டது…
அதற்கு
நம்மவர் கலைக்கூடம்
நம்மவர் படிப்பகம்
நம்மவர் நூலகம் என்று
பெயரிட வேண்டும் என்றும் ஏற்கனவே முடிவு செய்து இருந்தேன்.

இவை எல்லாம் முழுமைப் பெற்றப் பிறகே உங்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று இரகசியம் காத்துவந்தேன்.
ஆனால் காலம் இப்படி ஒரு நிகழ்வின் மூலம் உங்கள் பாதம் என் மண்ணின் மீது பதிய ஏற்பாடு செய்திருக்கிறது என்றதும் இந்த வாய்ப்பினை நான் என் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்கிறேன்.
அமையவிருக்கு ஒரு மாபெரும் கனவிற்கான கல்வெட்டை திறந்து வைக்குமாறு அன்போடு அழைக்கிறேன் …
அன்பே… அன்பை மன்னிக்கும்
மன்னிப்பை ஏற்று மறுதலிக்காமல் ஏற்பீர்கள் என்று அழைக்கிறேன் வாருங்கள்.

***
*நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்.*
1
நம்மவர் பத்மபூஷன்
திரு. கமல்ஹாசன்
தலைவர்
மக்கள் நீதி மய்யம்.
2
மாண்புமிகு முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
பள்ளிக் கல்வி துறை அமைச்சர்
3
மாண்புமிகு முனைவர் கோவி.செழியன் அவர்கள்
உயர் கல்வித் துறை அமைச்சர்.
4
திரு. ச. முரசொலி
அவர்கள்
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்.
5,
திரு. A.C . மெளரியா IPS அவர்கள்
துணைத் தலைவர்
மக்கள் நீதி மய்யம் .
6
திரு.தங்கவேல் அவர்கள் .
துணைத்தலைவர்
மக்கள் நீதி மய்யம்.
7
திரு. அருணாச்சலம் அவர்கள்.
பொதுச் செயலாளர்
மக்கள் நீதி மய்யம்.
8
திரு.துரை.சந்திரசேகரன் அவர்கள்
திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்
9
திரு. T.K.G. நீலமேகம் அவர்கள்
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர்.
10
திரு. சண். இராமநாதன் அவர்கள்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்.
11
திருமதி. அஞ்சுகம் பூபதி அவர்கள்.
தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர்.
12
திரு. து. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் தஞ்சாவூர்.
13
திரு. நெ. தியாகராஜன் அவர்கள்
மாவட்ட வருவாய் அலுவலர் தஞ்சாவூர்.
14
திருமதி. ஜோதிலட்சுமி அவர்கள் .
இணை ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர்.
15
திரு. மாதவன் அவர்கள்
மாவட்டக் கல்வி அலுவலர் தஞ்சாவூர்.
16
திரு.ம. இராஜாராமன் அவர்கள் .
மண்டல உதவி இயக்குநர்.
மண்டல கலைப் பண்பாட்டு மைய்யம் தஞ்சாவூர்.
17
திரு. இரா.செழியன் அவர்கள்
யோகம் ரியல் ஸ்டேட் அதிபர்.
வெற்றித் தமிழர் பேரவை
மாநில துணைப்பொது செயலாளர்.
18
புதுக்கோட்டை பாரதி
பட்டிமன்ற பேச்சாளர்.