கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில்
முனீஸ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதாரவி, குரோஷி, வேல ராமமூர்த்தி
மற்றும் பலர் நடித்து நவம்பர் 21 ல் வெளியாகும் படம் மிடில் கிளாஸ்.
கதை
ஒரு
மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி செக் கிடைத்து அது தொலைந்தால், என்ன நடக்கும். என்பதுதான் படத்தின்கதை
முனீஸ்காந்த் தன் மனைவி விஜயலட்சுமி, தனது பிள்ளைகள் இருவர் என மிடில் கிளாஸ் வாழ்க்ககை வாழ்ந்து வருகிறார். தன் மனைவி விஜயலட்சுமி தான் வாங்கும் சாம்பளத்திற்கு கணக்கு போட்டு வாழாமல் சென்னையில் கடன் வாங்கி வீடு வாங்க சொல்லி நச்சரித்துவருகிறார். இதில் பிள்ளைகள் ஆசைகளையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை. இந்த சமயத்தில் மச்சானுக்கு கல்யாணம். மனைவி அவரது அக்கா பெருமையை சொல்லி நாமளும் மூன்று பவுன் நகை செய்யனும்னு நசாசரிக்கிறார். மகளின் ஐடியாபடி ஒரு யூ டியூப் ஆரம்பிக்கின்றனர். அது வருமானத்தை கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இறந்த அப்பா மூலம் ஒரு கோடி செக் கிடைக்கிறது. அது காணாமல் போக அதன் பிறகு முனீஸ்காந்த் அந்த செக்கை தேட முடிவில் செக் கிடைத்ததா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாராஸ்யமான மீதிக்கதை.
கதை நாயகனாக முனிஸ்காந்த் சிறப்பாக நடித்து இருக்கிறார். கதாநாயகியாக விஜயலட்சுமி நடிப்பில் அசத்தி இருக்கிறார். டிடெக்ட்டிவ்வாக ராதாரவி சிறப்பாக நடித்துள்ளார். ஆட்டோ டிரைவர் நண்பனாக குரோஷி, முனீஸ்காந்த் தந்தையாக வேல ராமமூர்த்தி என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பிரணவ் முனிராஜின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் நாம் சம்பாதிப்பதில் கொஞ்சம் மற்றவர்களுக்கும் கொடுத்து வாழுங்கள் என்று கருத்தை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.
குடும்பத்துடன் பார்க்க வேண்டியப டம்
நவம்பர் 21 முதல் தியேட்டர்களில்