Take a fresh look at your lifestyle.

அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா மற்றும் சைதன்யா!

8

அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த ரெஜினா மற்றும் சைதன்யா!

டெமாக்ரடிக் சங்காவின் ‘சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்’ விழா: அமைச்சர் பிடிஆருக்கு அழைப்பு விடுத்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK!

‘டெமாக்ரடிக் சங்கா’ அமைப்பின் நிறுவனர்களான நடிகையும், சமூக ஆர்வலருமான ரெஜினா கசாண்ட்ரா மற்றும் சைதன்யா MRSK, தமிழக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்களை தங்கள் அமைப்பின் ஆண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விழாவில் மதிப்புமிக்க ‘சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்’ வழங்கப்படும்.

கொள்கை வகுப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குபவர்களை ஒன்றிணைக்கும் இந்த அரங்கம், ஜனநாயகத்தின் தற்போதைய நிலையை விவாதிக்கும் ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது. இந்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி மறை, புதிய நடைமுறைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உயர்மட்ட விவாதங்கள் நடைபெறும்.

ஆட்சி முறை மற்றும் பொது நிதி குறித்த அமைச்சர் PTR அவர்களின் கருத்துக்கள் பலமுறை அர்த்தமுள்ள விவாதங்களை தூண்டியுள்ளதால், இந்த மன்றத்தில் அவர் பங்கேற்பது நிகழ்வுக்கு பெரும் மதிப்பை சேர்க்கும் என ரெஜினா மற்றும் சைதன்யா கருதுகின்றனர்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமான ‘வருடாந்திர சேஞ்ச்மேக்கர்ஸ் விருதுகள்’, தங்கள் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பால் சமூகங்களை வலுப்படுத்திய தனிநபர்களையும், அமைப்புகளையும் கௌரவிக்கும். ஒத்துழைப்பு மற்றும் கருணையை மையமாக கொண்டு, மேலும் நியாயமான ஜனநாயக எதிர்காலத்திற்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிப்பதே இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாகும்.