Take a fresh look at your lifestyle.

மெட்ராஸ் மாஃபியா கம்பேனி திரைவிமர்சனம்

4

ஏ எஸ் முகுந்தன் இயக்கத்தில் ஆனந்தராஜ் சம்யுக்தாஆராதியா, தீபா, ஷகிலா முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மெட்ராஸ் மாஃபியா கம்பேனி’.

கதை

ராயபுரம் ஏரியாவின் பிரபல தாதாவான பூங்காவனம்(ஆனந்தராஜ்) ஒரு வித்தியாசமான ரவுடி ஏஜென்ஸியை ஐடி கம்பெனி போல்
நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஏஜெண்டுகளை நியமித்து தனக்கு வரும் அசைன்மென்ட்டுகளைக் கொடுத்து கொலைச் செய்ய வைக்கிறார். பல கொலைகளைச் செய்யும் பூங்காவனம் மீது ஒரு எப் ஐ ஆர்கூட இல்லை என்பதால் அவரை கைது செய்ய முடியாமல் போலிஸ் திணறுகிறது. இன்ஸ்பெக்டர் திகழ்பாரதி (சம்யுக்தா) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பூங்காவனத்தை என்கவுண்டர் செய்ய முடிவெடுக்கப்படுகிறார்கள். அதே சமயம், தொழில் போட்டி காரணமாக உடன் இருக்கும் சிலர் ஆனந்தராஜை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இந்த இரண்டு தரப்பினரிடம் இருந்து ஆனந்தராஜ் தப்பித்து, தனத மாஃபியா தொழிலை தொடர்ந்தாரா ? இல்லையா ? என்பதை கலகலப்பாக சொல்வதே மெட்ராஸ் மாஃபியா கம்பேனி.

நகைச்சுவை நடிகராக சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஆனந்தராஜ், இந்த படத்தில் வில்லனாக தன் நடிப்பு மூலம் மிரட்டவும் செய்திருக்கிறார், நக்கலான பேச்சின் மூலம் சிரிக்க வைக்கவும் செய்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக சக்யுக்தா ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்,
ஆனந்தராஜின் மனைவியாக நடித்திருக்கும் தீபா, கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யாவின் நடிப்பும் அருமை.
ராம்ஸ், சசிலயா என இதில் நடித்திருக்கும்ஸஅனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
அசோக் ராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் ஸ்ரீகாந்த் தேவாவின்
இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்க வைக்கிறது.

ரவுடிகளின் கடைசி வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதை கதையாக எழுதியிருக்கும்
வி.சுகந்தி அண்ணாதுரையின் கதைக்கு ஏ எஸ் முகுந்தன் சுவாராஸ்யமாக திரைக்கதையமைத்து எல்லோரும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார். பாராட்டுக்கள்.