ஆட்டோகிராப் திரைவிமர்சனம்
இது கோபிகா மற்றும் மல்லிகாவின் தமிழ் சினிமாவில் முதல் படம் . இந்த படம் பிப்ரவரி 2004 இல் இந்தியாவில் வெளியிடப்பட்டது, மேலும் பிரான்சில் நடந்த லியோன் ஆசிய திரைப்பட விழாவிலும் கனடாவில் நடந்த மாண்ட்ரீல் உலக திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. வெளியானதும், இந்த படம் விமர்சன ரீதியான பாராட்டையும் வணிக ரீதியான வெற்றியையும் பெற்றது. இது தெலுங்கில் நா ஆட்டோகிராஃப் , கன்னடத்தில் மை ஆட்டோகிராஃப் மற்றும் பெங்காலியில் அமர் அபோன்ஜோன் என மறுஉருவாக்கம் செய்யப்பட்டது .

சேரன் தயாரித்து இயக்கி, நடித்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ஆட்டோகிராப்’ படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேரனுடன் சினேகா, கோபிகா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றிருந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் திரைக்கு வந்திருக்கிறது.
கதை
சேரன் பள்ளி பருவத்தில் மல்லிகா மீதுள்ள காதலையும் கல்லுரி பருவத்தில் கோபிகா மீது ஏற்படும் காதலையும் சினேகா மீது ஏற்படும் நட்பையும் முடிவில் கனிகாவை திருமணம் செய்து கொள்வதையும் அந்த திருமணத்திற்கு தான் காதலித்த பெண்கள் நட்பான பெண் மற்றும் தான் பழகிய நண்பர்கள் வாத்தியார் என வந்து வாழ்த்துவதை மிக எதார்த்தமாக சொல்லியிருப்பதே படத்தின் சுவாராஸ்யமான படத்தின் கதை.
கதாநாயகனாக சேரன் நடித்நிருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். கதாநாயகிகளாக சினேகா, கோபிகா, மல்விகா, கனிகா கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்கள். ராஜேஷ், இளவரசு, பெஞ்சமின், உமாபதி, வேல்முருகன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு படத்திற்குபெரிய பலம். பரத்வாஜின் பாடல்கள் இசையும் சபேஷ் முரளியின் பிணணனி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்குநர் சேரன் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் காதல் நட்பை பிரதிபலிக்கும் கதையை அழகாக சொல்லி அன்றே வெற்றி படமாக கொடுத்ததை மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளார்.
பார்த்தவர்கள் மீண்டும் பார்க்காதவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம்.