ஸ்ரீலட்சுமி ட்ரீம் பேக்டரி தயாரிப்பில்
SJN.அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில்
கவுசிக்ராம், பிரதீபா, கஞ்சா கருப்பு, ஆரோல் டி. சங்கர் மற்றும் பலர் நடித்து வேளியாகியிருக்குமா படம் கிரிஸ்டினா கதிர்வேலன்.
ஒளிப்பதிவு : பிரகத்முனியசாமி
இசை : என்.ஆர்.ரகுநந்தன்
கதை
கல்லுாரியில் தன்னுடன் படிக்கும் கிறிஸ்டினா(பிரதீபா)வை ஒரு தலையாக காதலிக்கிறார் ஹீரோ கதிர்வேலன்(கவுசிக்ராம்). அப்போது தங்கள் நண்பர்களின் பதிவு திருமணத்துக்கு இருவரும் சாட்சிகளாக கையெழுத்து போடுகிறார்கள். அவர்களின் திருமண சான்றிதழில் தவறு ஏற்பட, பெயர் குழப்பதால் இவர்கள் திருமணம் செய்ததாக சான்றிதழ் வருகிறது. கிறிஸ்டினாவுக்கு இன்னொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன நிலையில் இந்த சான்றிதழ் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன நடக்கிறது. கிறிஸ்டினா, கதிர்வேலன் தடைகளை மீறி சேர்ந்தார்களா? என்பதே படந்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக கவுசிக்ராம் நன்றாகவே நடித்துள்ளார். கதாநாயகியாக பிரதீபா கோடுத்த கதிபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். கஞ்சா கருப்பு, ஆரோல் டி சங்கர் ஏன இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். பிரகத் முனியசாமியின் ஒளப்பதிவு படத்திற்கு பெரிய பலம். என். ஆர். ரகுநந்தனின் இசையில் பாடல்களும் பின்னனி இசையும் படத்தற்கு கூடுதல் பலம்
இயக்குநர் SJN அலெக்ஸ் பாண்டியன் காதல் கதையை ஏல்லோரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்