Take a fresh look at your lifestyle.

’ஆண்பாவம் பொல்லாதது’ – விமர்சனம்

8

டிரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர். ஜே. விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஆண்பாவம் பொல்லாதது’

சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ரியோ ராஜ் மற்றும் கோவையைச் சேர்ந்த பெண் மாளவிகா மனோஜ் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

சில மாதங்கள் கடந்த நிலையில் ஈகோவால் இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் கரு கலைந்து விடுகிறது. இதனையடுத்து விவாகரத்து கேட்டு நாயகி மாளவிகா நீதிமன்றத்திற்கு செல்கிறார். இவருக்கு துணையாக வக்கீல் ஷீலா இருக்க விவாகரத்து வேண்டாம் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார் நாயகன் ரியோ இவருக்கு துணையாக வக்கீல் ஆர். ஜே. விக்னேஷ் காந்த், இருக்கிறார்.

முடிவில் ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் இருவருக்கும் விவாகரத்து கிடைத்ததா ? ரியோ ராஜ் நினைத்தபடி இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்களா ? வக்கீல்கள் ஆர். ஜே. விக்னேஷ்காந்த் – ஷீலா இருவருக்குமான பிரச்சனை என்ன ? என்பதை சொல்லும் படம்தான் ’ஆண்பாவம் பொல்லாதது’

சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரியோ ராஜ் இயல்பான நடிப்பால் காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .

சக்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா மனோஜ் மிக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

வக்கீல்களாக நடித்திருக்கும் ஆர். ஜே. விக்னேஷ் காந்த் – ஷீலா இருவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். ஆர். ஜே. விக்னேஷ் காந்தின் உதவியாளராக நடித்திருக்கும் நடிகர் ஜென்சன் திவாகர் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
நாயகி மாளவிகா மனோஜ் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் என மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சித்து குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது.

சமூக வலைத்தள ரீல்கள் மூலம் குடும்பத்தில் எத்தகைய பிரச்சனையை ஏற்படுகின்றது என்பதை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவை கலந்து சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ரேட்டிங் – 3.5 / 5