Take a fresh look at your lifestyle.

’தண்டகாரண்யம்’ – விமர்சனம்

83

நீலம் புரொடக்ஷன்ஸ் & Learn and Teach – பா.ரஞ்சித், சாய் தேவானந்த்.எஸ், சாய் வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ்,கலையரசன், ஷபீர் கல்லாரக்கல் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு சாம், அருள்தாஸ், யுவன் மயில்சாமி, கவிதா பாரதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’தண்டகாரண்யம்’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தில் வசிக்கும் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா என்று குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். கலையரசன் வனத்துறையில் தற்காலிக காவலராக பணியாற்றி வருகிறார்.

எப்படியாவது அரசு வேலையில் சேர விட வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார். ஆனால், உயர் அதிகாரியான அருள்தாஸ் , தினேஷ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் கலையரசனின் தற்காலிக பணியும் பறிபோகிறது.

கலையரனை எப்படியாவது அரசு பணியில் சேர்க்க நினைக்கும் அண்ணன் தினேஷ், ஒருவரது தகவலின் பேரில், நக்சலைட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு உருவாக்கிய சிறப்பு பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்த்து விட முடிவு செய்கிறார். அதற்காக விவசாய நிலத்தை விற்று பணம் கொடுத்து அனுப்புகிறார்.

இதனையடுத்து காதலி நாயகி வின்சு  சாமிடம் கூறி விட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் படைப்பிரிவில் இணைந்து பயிற்சி பெற்று வரும் கலையரசன், பலவிதமான கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவிக்கிறார்.

இங்கிருந்து வேலையோடு தான் ஊர் திரும்ப வேண்டும் என்ற மனநிலையில் கலையரசன் இருக்க, அந்த இடத்திற்கு வருபவர்கள் உயிரோடு வெளியே செல்ல முடியாது, என்ற உண்மையை தெரிந்துக் கொள்கிறார்.

முடிவில் நாயகன் கலையரசன் உயிருடன் வெளியே சென்றாரா? இல்லையா? நாயகி வின்சு சாமுடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா?  என்பதே ’தண்டகாரண்யம்’   படத்தின் கதை.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தினேஷ் மற்றும் கலையரசன்  இருவருமே இயல்பான நடிப்பில்  தங்களுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்கள்.

நாயகிகளாக வரும் ரித்விகா , வின்சு சாம் , சபீர் கல்லரக்கல், பாலசரவணன், அருள்தாஸ், முத்துகுமார், யுவன் மயில்சாமி என மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல் மற்றும்  பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

பிரதீப் கலைராஜா ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது.

அழுத்தமான திரைக்கதை அமைப்பில் உணர்வுப்பூர்வமாக கதையாக  உண்மை சம்பவத்தை மையக்கருவாக கொண்டு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை

ரேட்டிங் : 3./ 5