Take a fresh look at your lifestyle.

’மதராஸி’ – விமர்சனம்

74

ஸ்ரீ லஷ்மி மூவிஸ் – என்.ஸ்ரீலஷ்மி பிரசாத் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் கல்லரக்கல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மதராஸி’

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக நினைக்கும்  வித்யூத் ஜமால் மற்றும் ஷபீர் கல்லரக்கல் இருவரும் தமிழ்நாட்டிற்கு 6 கண்டெய்னர் லாரியில் துப்பாக்கிகளை கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு துறையினர் இதனை தடுக்க நினைக்கையில் பிஜு மேனனுக்கு விபத்து ஏற்பட  மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இதே நேரத்தில் நாயகி ருக்மணி வசந்தின் காதலில் ஏற்பட்ட  தோல்வியால் சிவகார்த்திகேயன் பாலத்தின் மீது இருந்து கீழே குதிக்க சிறு காயங்களுடன் பிஜு மேனன் இருக்கும் மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்

இந்நேரத்தில், காதலி பிரிந்து சென்ற சோகத்தில் தற்கொலை செய்துகொள்ள போவதாக முயற்சிக்கும் சிவகார்த்திகேயனை வைத்து, பயங்கரவாத கும்பலை ஒழிக்க பிஜு மேனன் முடிவு செய்கிறார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்காக சுமார் 16 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது.

ஒரு கட்டத்தில் பிஜு மேனனுக்கு  அம்பத்தூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கண்டெய்னர் லாரிகள் இருப்பது தெரிய வர  அந்த ஆயுதங்களைஅழிக்க  மனநலம் பாதிக்கப்பட்ட சிவகார்த்திகேயனை அனுப்பி வைக்கிறார் பிஜு மேனன்.

முடிவில் ஆயுதங்களை அழிக்க சென்ற  சிவகார்த்திகேயன் பிஜு மேனன் திட்டத்தை நிறைவேற்றினாரா  ?

சிவகார்த்திகேயனின்  காதலி  ருக்மணி வசந்த் மீண்டும் அவரது காதலை ஏற்று கொண்டாரா ? இல்லையா ? என்பதை முழுக்க ஆக்க்ஷன்  ஜானரில் சொல்லும் படம்தான் ‘மதராஸி’.

நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இயல்பான நடிப்பில் மனநல பாதிக்கப்பட்ட  இளைஞராக  மற்றொரு பக்கம் வழக்கமான பாணியில் காதல்,நடனம்,  அதிரடி ஆக்க்ஷன் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த் கதைகேற்றபடி இயல்பான நடிப்பில் கவனம் பெறுகிறார்

திரைக்கதைக்கு பக்க பலமாக  பயங்கர வாத  வில்லனாக வித்யூத் ஜமால், மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சபீர் கல்லரக்கல், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக நடித்திருக்கும் பிஜு மேனன், விக்ராந்த் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பில் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையும்,  சுதீப் இளமோன் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.

தமிழகத்தில் துப்பாக்கி போன்ற பயங்கரமான ஆயுதங்கள் கிடைத்தால்  பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிரச்சனையை மைய கருவாக வைத்து முழு நீள ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ரேட்டிங் – 4 .5 / 5