சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர்கான், ஸ்ருதி ஹாசன், சவுபின் சாஹிர், கண்ணன் ரவி, மோனிகா ரெபகா ஜான், திலீபன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கூலி’
30 ஆண்டுகளாக தன்னுடைய பழைய வாழ்க்கையை மறந்து வாழும் ரஜினி சென்னையில் தேவா என்ற பெயரில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருகிறார். மறுபக்கம் தொழிலதிபரான நாகார்ஜுனா விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சட்ட விரோதமான வேலைகளை செய்து வருகிறார்.
நாகர்ஜுனாவிற்கு வலது கரமாக சவுபின் சாஹிர் இருக்கிறார். இவர் போலீசுக்கு தகவல் கொடுப்பவர்களை எல்லாம் கொன்று அந்த உடல்களை அப்புறப்படுத்துகிறார். நாகர்ஜுனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சத்யராஜ் தான் கண்டுபிடித்திருக்கும் கருவி மூலம் பிணங்களை சாம்பலாக்கும் வேலையை பார்த்து வருகிறார்.
இதற்கிடையே திடிரென்று மரணமடையும் சத்யராஜின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த விசகபட்டினத்திற்க்கு வரும் ரஜினிகாந்த், அவரது சாவில் மர்மம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். சத்யராஜின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் எதிரிகளால் ஆபத்து இருப்பதை அறிவும் ரஜினி ஸ்ருதியை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார்.
ரஜினிகாந்த் – ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே உள்ள உறவு என்ன ? என்பதே ’கூலி’ படத்தின் மீதிக்கதை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாஸாக ஸ்டைலாக நடித்திருக்கிறார். இளமைக்கால ரஜினிகாந்த வரும் காட்சிகள் மட்டும் மனதில் நிற்கிறது.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு உள்ளது.