Take a fresh look at your lifestyle.

‘போகி’ – விமர்சனம்

74

Vi Cinema Global Networks & Like Presents தயாரிப்பில் விஜயசேகரன் இயக்கத்தில் நபி நந்தி, சரத், சுவாசிகா, பூனம் கவூர், வேலா ராமமூர்த்தி, மொட்ட ராஜேந்திரன், சங்கிலி முருகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘போகி’

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கும்பலை சேர்ந்தவர்களை நாயகன் நபி நந்தியும், சரத்தும் கொலை செய்கிறார்கள். மறுபக்கம் காவல்துறை.கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகிறது

இந்நிலையில் சிறுவயதில் பிரிந்து சென்ற தோழியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நாயகன் நபி நந்தி நாயகி மீதான தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் போகிறது.

ஒரு கட்டத்தில் நாயகன் நபி நந்தி கொலை பார்க்கும் நாயகி அதிர்ச்சி அடைகிறார். இறுதியில் நாயகன் நபி நந்தி தொடர் கொலை செய்வதற்கான காரணம் என்ன? நாயகி நாயகன் நபி நந்தியை போலீசில் பிடித்து கொடுத்தாரா?இல்லையா? என்பதே ‘போகி’ படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகனாக நடித்திருக்கும் நபி நந்தி முதல்படம் போல இல்லாமல் சிறப்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார்

தங்கை மீது பாசம், காதலி மீது நேசம், என அனைத்திலும் நடிப்பபை சரியாக கொடுத்து அனைவரின் கவனம் பெறுகிறார். தங்கையாக நடித்திருக்கும் ஸ்வாசிய யதார்த்த நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சரத், ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கும் பூனம் , காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி வில்லன் கதாபாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் பயமுறுத்தும் நான் கடவுள் ராஜேந்திரன், ஒரு காட்சியில் வந்தாலும் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மூத்த நடிகர் சங்கிலி முருகன், ‘பிச்சைசக்காரன்’ கார்த்தி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.

இசையமைப்பாளர் மரியா மனோகர் இசையில், பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. ராஜா சி.சேகர் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கும் வகையில் உள்ளது.

பாலியல் ரீதியிலான குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், பழங்குடி இன மக்களின் வலி , இறந்த பிறகும் பாலியல் சீண்டல் ஆகியவற்றை மையக்கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயசேகரன் இன்றை சமூகத்தில் நடக்கிற உண்மை சம்பவங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

ரேட்டிங்  :3 /5