Take a fresh look at your lifestyle.

’மிஸ்சஸ் & மிஸ்டர்’ – விமர்சனம்

64

வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜய்குமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மிஸ்சஸ் & மிஸ்டர்’

ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பேங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். முதலில் ராபர்டிக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை அனால் வனிதா குழந்தை பிறந்தால் தன் அழகு போய் விடும் என்பதற்காக குழந்தை வேண்டாம் என்கிறார்.

இப்படியே பல ஆண்டுகள் கடந்து விட வனிதா தனது 40 வது பிறந்தநாள் அன்று குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு எடுக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ராபர்ட் இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, இதனையடுத்து வனிதா விடாமல் பல ரொமான்ஸ் முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
ஒரு கட்டத்தில் வனிதா விஜயகுமார் கர்ப்பமாகி விட, ராபர்ட் மாஸ்டருக்கு தெரிந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள விட மாட்டார் என்று நினைத்து அவருக்கு தெரியாமல் பாங்காக்கில் இருந்து தன் உறவான ஸ்ரீமன் இருக்கும் இடத்திற்கு இந்தியா வந்துவிடுகிறார்.
வனிதா விஜயகுமாரின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் ராபர்ட்மாஸ்டர் வனிதா விஜயகுமாரை தேடி இந்தியா வருகிறார்.

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரால் ஏற்படும் பிரச்சனையால் வனிதா விஜயகுமாருக்கு பிரசவ வலி வர மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனிதா விஜயகுமாருக்கு மருத்துவர்கள் குழந்தை பிறப்பதில் பிரச்சனை உள்ளது என தெரிவிக்கிறார்கள்.

முடிவில் வனிதா விஜயகுமாருக்கு எந்த பிரட்சனையில்லாமல் குழந்தை பிறந்ததா?
குழந்தை வேண்டாம் என கூறிய ராபர்ட் மாஸ்டர் இறுதியில் வனிதா விஜயகுமாரை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’மிஸ்சஸ் & மிஸ்டர்’

நாயகியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிக்கிறார் .. ராபர்ட் மாஸ்டர் உடன் நெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் ரசிகர்களை ஏங்க வைக்கிறார் .

வனிதா விஜயகுமாரின் கணவராக நடித்திருக்கும் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார் .

வனிதா விஜயகுமாரின் அம்மாவாக நடித்திருக்கும் ஷகிலா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஃபாத்திமா பாபு, ஸ்ரீமன், ஆர்த்தி கணேஷ், கணேஷ்குமார், ரவிகாந்த், அனுமோகன், வாசுகி, ஸ்வேதா பாரதி என படத்தில் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர். ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கும் முன்னாள் கதாநாயகி கிரண்

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ,பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
ராஜபாண்டி.டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், டிஜி கபில் ஆகியோரது ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.

திருமணமாகி சில வருடங்கள் கடந்து 40 வயதில் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சனையை மைய கருவாக வைத்து கணவன் – மனைவி இடையே உள்ள காதலை அழகாக சொல்லி சில காட்சிகளில் தொய்வு இருந்ததாலும் ரசிக்கும்படி திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வனிதா விஜயகுமார்.

ரேட்டிங் – 3 / 5