Take a fresh look at your lifestyle.

‘குபேரா‘- விமர்சனம்

70

ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ், அமிகோஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா  , ஜிம், ஹரிஷ் பெராடி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘குபேரா’

மத்திய அரசின் எரிவாயு திட்ட ஒப்பந்தத்தை பெறுவதற்காக ரூ.1 லட்சம் கோடியை சட்ட விரோதமாக கைமாற்ற மிகப்பெரிய தொழில் அதிபரான ஜிம் சர்ப் நினைக்கிறார்.

அதற்காக சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகார்ஜுனாவை சந்திக்கிறார் ஜிம் சர்ப். அவர் தனக்கு உதவி செய்தால் சிறையில் இருந்து வெளியில் எடுப்பதாக சொல்கிறார் ஆனால் அதற்கு நாகார்ஜுனா ஒப்புக்கொள்ளவில்லை.

சட்டப்படிதான் நான் இருப்பேன் என்று சொல்கிறார். ஆனால் நீதிமன்றமோ நாகார்ஜுனாவிற்கு மேலும் ஏழு வருட சிறை தண்டனை அளிக்கிறது.

ஆரம்பத்தில் மறுக்கும்  நாகார்ஜுனா நீதிமன்றம்  தீர்ப்பளிக்கும் ஏழு வருட சிறை தண்டனையால்  தன் குடும்பத்திற்காக ஜிம் சர்ப் சொல்வதை தான் செய்வதாக அவரிடம் ஒப்பு கொள்கிறார்.

அரசாங்கத்திற்கு தெரியாமல் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனையை செய்வதற்காக பிச்சைக்காரர்களாகிய நான்கு பேரை தேர்வு செய்கிறார் நாகார்ஜுனா. 

நாகார்ஜுனா தேர்வு செய்யும் நான்கு பேரில் ஒருவர் தான் தனுஷ்.

தனுஷுடன் சேர்ந்து அனைவருக்கும் நன்றாக பயிற்சி கொடுத்து அந்த பிச்சைக்காரர்கள் நான்கு பேர் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்கி கோடிக்கணக்கான  கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிறார் நாகார்ஜுனா. . 

இந்நிலையில் ஜிம் சர்ப் ஆணைப்படி ஒவ்வொருவரது  பெயரிலும் பணப்பரிவர்த்தனை முடிந்த பிறகு நடுகடலில் கொல்லபடுகிறார்கள் . 

 இந்நேரத்தில் தனுஷை வைத்து ரூபாய் பத்தாயிரம் கோடி பண பரிமாற்றம் முடிந்த பிறகு அவரை கொலை செய்வதற்காக அழைத்துச் செல்லும்போது  அவர்களிடமிருந்து அவர் தப்பித்து விடுகிறார். 

இதற்கு பின் தனுஷால் நடந்த  ரூபாய் பத்தாயிரம் கோடி பணம்  பரிமாற்றம் தோல்வி அடைவதால் அதிர்ச்சியடையும் நாகார்ஜுனா 

தனுஷை உயிருடன்  பிடித்தால் மட்டுமே அந்த பணப்பரிவர்த்தனையை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதால்   தன் அடியாட்களுடன்  நாகார்ஜுனா காணாமல் போன தனுஷை தேட,,,உயிருக்காக தப்பி பிழைத்த தனுஷ் மும்பை ரயில் நிலையத்தில் ராஷ்மிகா மந்தனாவை சந்திக்க ஒரு கட்டத்தில்  ராஷ்மிகா மந்தனாவின் செல்போனில் இருந்து நாகார்ஜுனாவுக்கு தனுஷ் போன் செய்கிறார். 

இதனால் தனுஷ் இருக்கும் இடத்தை பற்றி சொல்ல ராஷ்மிகா மந்தனாவை   துப்பாக்கியுடன் நாகார்ஜுனாவும் அவரது ஆட்களும்  மிரட்டுகின்றனர். 

முடிவில் தனுஷும் ராஷ்மிகா மந்தனாவும்  நாகார்ஜுனாவின்தேடுதல் வேட்டையிலிருந்து  இருந்து தப்பித்தார்களா?

பத்தாயிரம் கோடி பரிவர்த்தனையை மீண்டும்  தனுஷை வைத்து நடத்தினாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான்  ‘குபேரா ‘

நாயகனாக் தனுஷ் எந்த வித ஹீரோயிசம் இல்லாமல் தேவா என்கிற க்தாபாத்திரமாகவே படம் முழுவதும் இயல்பான நடிப்பில் அனைவரும் பாராட்டும்படி வாழ்ந்திருக்கிறார் .
இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா
திரைக்கதைக்கு பக்க பலமாக சிபிஐ அதிகாரியாக  வரும் நாகார்ஜுனா, வில்லனாக மிரட்டும் ஜிம் சர்ப் .
தேவி ஸ்ரீ பிரசாத் இசையும், நிக்கேத் பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .
மிக பெரிய பண மாபியாக்கள் கேட்க நாதியில்லாத பிச்சைகாரர்களை வைத்து நடத்தும் சட்டவிராத பண பரிவர்த்தனையை மையமாக வைத்து பிச்சை எடுப்பவனும் மனிதன்தான்  அவனுக்கும் வாழ்வுரிமை உள்ளது என சொல்லும் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சேகர் கம்முலா.
 
ரேட்டிங் – 3.5 / 5