மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷிணி, ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மெட்ராஸ் மேட்னி’
முதியோர் இல்லத்தில் வசிக்கும் கதையாசிரியரான சத்யராஜ் எளிய மனிதரின் வாழ்க்கையை கதையாக எழுத நினைக்கிறார்.
சென்னையில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுபவர் காலி வெங்கட் இவரது மனைவி ஷெல்லி இவர்களுடைய மூத்த மகள் ரோஷிணி இளைய மகன் விஷ்வா என வாழ்ந்து வருகிறார்கள்.
கல்லுரி படிப்பை முடித்த காளி வெங்கட்டின் மகள் ரோஷினி பெங்களூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ஒருபக்கம் மகன் படிப்பிக்காக பணம் தேவைப்படுகிறது. மறுபக்கம் மகளுக்கு திருமணம் செய்து வைக்க பணம் தேவைப்படுகிறது.
முடிவில் காளிவெங்கட் மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தினாரா? மேற்கொண்டு மகனை படிக்க வைக்க தேவையான பணம் அவருக்கு கிடைத்ததா ?இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ’மெட்ராஸ் மேட்னி’