யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் ஸ்ரீதரன் வழங்கும் வான் புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், பிரியதர்ஷன்,கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வருணன்’
வட சென்னை ராயபுரம் பகுதியில் ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும் தண்ணீர் கேன் விற்பனை செய்கிறார்கள். தங்களுக்குள் எந்த ஒப்பந்தம் செய்து கொள்ளாமலேயே, ஆளுக்கு ஒரு ஏரியா என பிரித்துக்கொண்டு தொழில் நடத்துகிறார்கள்.
தொழில் போட்டி காரணமாக சரண்ராஜின் மைத்துனர் வில்லன் சங்கர்நாக் விஜயனுக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
போட்டி காரணமாக ஒரு தண்ணிர் கேன் வாங்கினால் இரண்டு தண்ணிர் கேன் இலவசம் என விளம்பரம் செய்து சரண்ராஜ் மனைவி மகேஸ்வரி தண்ணிர் கேன் சப்ளை செய்கிறார் .
ஒரு கட்டத்தில் குழாய் தண்ணிர் பிடிக்கும் பிரட்சனையில் சரண்ராஜ் மனைவி மகேஸ்வரிக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷுக்கும் ஏற்படும் தகராறில் மகேஸ்வரிக்கு தலையில் அடிபடுகிறது .
வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் நடிப்பில் மிரட்டுகிறார் .
ரேட்டிங் – 3 / 5